Ishwarya Mahalakshmi Temple: குலோத்துங்கச் சோழன் மட்டுமே வழிபட்ட தலம்!
வில்வ மர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி காட்சி தருகிறார்
வெள்ளுரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சுந்தரி உடனுறை திருகாமேஷ்வரர் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாலட்சுமி திருக்கோயில். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் முசிறிக்கு கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் வில்வராயன் சேஷித்ரம் எனும் வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.
கிபி ஆறாம் நூற்றாண்டில் சோழ மன்னனால் சுண்ணாம்பு காரையை கொண்டு புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது என கல்வெட்டு கூறுகிறது. மானும் புலியும் ஒரு சேர நீர் அருந்தும் படியான ஆட்சி புரிந்த சிறப்பு பெற்ற முசுமுந்த சக்கரவர்த்தி தேவர்கள் மற்றும் எந்த தெய்வ சக்திகளாலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று வரம் பெற்ற பலன் எனும் அசுரங்களுடன் கூடச் செல்லும் முன் திரு காமேஷ்வரப் பெருமானிடம் தன்னுடைய மகுடத்தையும் போர் கருவிகளையும் வைத்து வழிபட்டு அசுரனை வெல்லும் சக்தியை பெற்றார்.
வேறு எங்கும் காணாத வகையில் வில்வ மர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி காட்சி தருகிறார். அக்காலத்தில் படை பலம் பெற்ற பேரரசுகள் சிற்றரசுகளை வென்று அடிமையாக்கி கப்பம் கட்ட சொல்வார்கள். ஆனால் சிற்றரசுகளாக இருந்தாலும் தன்னுடைய மகுடத்தை காமேஷ்வர பெருமானிடம் வைத்து வணங்கி அரியணை ஏறினால் அந்த சிற்றரசனை எவ்வித பேரரசுகளாலும் வெல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.
கிபி ஆறாம் நூற்றாண்டில் ஒரு சோழ மன்னன் தன்னுடைய அரசாட்சியை விரிவு படுத்தும் பொருட்டு மற்ற அரசர்கள் வழிபடக்கூடாது என பழங்காலத்து நெற்களஞ்சியம் போல வடிவமைத்தார். அதன் பிறகு அரசர்கள் மட்டும் இன்றி நாட்டு மக்களும் வழிபட்டு காமராசர் பெருமானின் வசீகர சக்தியை பெறக்கூடாது என்று கோயிலை முழுமையாக அடைத்து வடகிழக்கு பகுதியில் சுரங்கப்பாதையின் வழியாக தான் மட்டும் வந்து காமேஷ் பெருமானை வழிபாடு செய்திருக்கிறார் இரண்டாம் குலோத்துங்கச் சோழன்.
திரு காமேஷ்வர பெருமானிடம் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்ட செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரம் கூறுகிறது. சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திரு காமேஸ்வரர் சங்கத்தில் சித்தியாகும் எனக் கூறப்படுகிறது.