Devanatha Perumal: திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூத்தவர் இவர்!
தேவநாத சுவாமி திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூத்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
108 வைணவ தளங்களில் நம் நாட்டு திருப்பதி என்று அழைக்கப்படும் திருத்தலம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி ஆலயம். இந்த ஆலயமானது கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
ஆலயத்தின் மூலவரான தேவநாத ஸ்வாமி திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூத்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. கோயிலுக்கு கிழக்கே அவஷதம் மலை என்று அழைக்கப்படும் மலை அமைந்திருக்கிறது. இந்த மலையானது ஆஞ்சநேய சஞ்சீவி மலையை சுமந்து சென்ற போது அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி என்று பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மலையில் கல்வி கடவுள் என்று அழைக்கப்படும் ஹயக்ரீவர் சன்னதி இருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக அமைந்த ஹயக்ரீவர் தலம் எதுவென்று பின்னர் தான் மாற்று இடங்களில் ஹயக்ரீவர் ஆலயங்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தேவநாத சுவாமி ஆலயமானது பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர், தவசி முனிவர் உள்ளிட்ட பலரும் தவம் புரிந்த தலமாகும். இக்கோயிலில் உள்ள செங்கமல தாயாருக்கு அபூர்வமாகினி, ஹேமாஜ நாயகி பல திருநாமங்கள் உள்ளன. செங்கமல தாயாரை வணங்குபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும் எனவும் தாயாருக்கு நவகிரக தெய்வங்கள் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் தினமும் பக்தர்கள் கூறுகின்றனர்.
தேவநாதசுவாமி சன்னதியில் திருமணம் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் புத்திக்கூர்மையுள்ள புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் முகூர்த்த நாட்களில் வாடகைக்கு 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தவர்கள் தேவநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செய்வார்கள். அது மட்டுமின்றி ஏழுமலையான் தரிசிக்கு செல்பவர்கள் தேவநாத சுவாமி தரிசித்துவிட்டு சென்றால் ஏதாவது ஒரு வடிவில் வெங்கடாசலபதியை விரைவாக காணலாம் எனவும் கூறப்படுகிறது.
இச்சன்னதியில் வருடம் முழுவதும் திருமஞ்சனம், கருட சேவை, பிரம்ம உற்சவம் என பல விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து மூலவரையும், தாயாரையும் தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்திச் செல்வது வழக்கம்.