நோய்களைக் குணப்படுத்தும் பாராய்த்துறைநாதர் கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நோய்களைக் குணப்படுத்தும் பாராய்த்துறைநாதர் கோயில்!

நோய்களைக் குணப்படுத்தும் பாராய்த்துறைநாதர் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 14, 2022 06:45 PM IST

தோல் நோய்களைக் குணப்படுத்தும் பாராய்த்துறைநாதர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

<p>பாராய்த்துறைநாதர் கோயில்</p>
<p>பாராய்த்துறைநாதர் கோயில்</p>

காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள் பக்தர்கள். குடத்தில் நீரை எடுத்த வண்ணம் பிராகார வலம் வருகிறார்கள். வழியில் பிராகாரத்தில் தனிச் சன்னதியில் இடம் கொண்டிருக்கிறார் விநாயக பெருமான். அழகிய மேடையுடன் காணப்படுகிறது பராய் மரம்.

அதன் அடிப்பகுதியில் மஞ்சள் நிற வஸ்திரம் காணப்படுகிறது. பக்தர்கள் குடத்தைத் தாங்கியபடி இந்த தல விருட்சத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் நாயகி பசும்பொன் மயிலம்மை. நின்ற கோலத்தில் நான்கு கரத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

தாருகாவனேஸ்வரர், பராய்த்துறைநாதர் என்றெல்லாம் போற்றப்படும் இவர் சுயம்பு மூர்த்தி. நால்வராலும் பாடப்பட்ட இந்த பெருமானின் இன்னொரு திருக்கோலமும் இங்கே விசேஷமானது. அது பிட்சாடனர் திருக்கோலம். பிட்சாடனர் கோலம் தாருகாவன முனிவர்களின் அதனைப் போக்கப் பெருமான் மேற்கொண்டது.

தான் என்ற ஆணவம் மிக்கவர்கள், பெற்றோரின் சொல்பேச்சு கேளாத குழந்தைகள் இங்கு வந்து பிட்சாடனர் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் இந்த குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.

உடலில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான நோய்களைப் போக்கும் சிறப்பு இந்தப் பராய் மரத்திற்கு உண்டு என்கிறார்கள். பராய் மரத்தின் இலையையும் ,விரலி மஞ்சளையும் சேர்த்துச் செய்த மருந்தினை இங்கே பிரசாதமாகப் பெறுகிறார்கள் பக்தர்கள். இதைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் குணமாகின்றன என்பது பலரின் அனுபவம்.

அதற்காகவே திருப்பராய்த்துறை நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள் பக்தர்கள். நோய்கள் எந்த விதத்திலும் வரலாம் அறியாமை, ஆணவம் என்று வந்தாலும் சரி, உடல்நலத்தைப் பாதிப்பதாக வந்தாலும் சரி இரண்டையும் குணப்படுத்தத் திருச்சி அருகே திருப்பராய்த்துறையில் கோயில் கொண்டிருக்கிறார் தாருகாவனேஸ்வரர்.

Whats_app_banner