Dharbaranyeswara Swamy: எல்லா நாட்களிலும் சனிபகவானை வழிபடலாம்!
நள சக்கரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது.
திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனிபகவான். சனியைப் போல கொடுப்பவருமில்லை. சனியை போல கெடுத்துவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ள திருநள்ளாறு நவகிரக தலங்களில் ஒன்று. நள சக்கரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது. சனீஸ்வர பகவானின் சக்தி வாய்ந்த திருவருட்சிலையை கொண்ட இக்கோயில் தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் ஒரு அங்கம்.
தர்ப்பாரண்யேசுவரர் கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்பவர் சனி பகவான். வீற்றிருக்கும் இடத்தை பொறுத்துதான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப, துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது.
அப்படி சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதை சனிப்பெயர்ச்சி என்று கூறுவர். அந்த புண்ணிய தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருநள்ளாறு வந்து பக்தியோடு வழிபட்டு செல்கிறார்கள்.
காவேரி தென்கரைத்தலங்களில் 52வது சிவதலமாகும். இத்தலத்தில் சனீஸ்வரன் இறைவன் வணங்கி பேரு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரன் புகழ் பெற்று விளங்குகிறார். மூலவர் தர்ப்பாரண்யேசுவரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தற்போதையீஸ்வரர் எனப்படுகிறார் தர்ப்பையில் முளைத்த தழும்புகள் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசை பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிப்பட்டிருக்கிறார்கள்.
மகா சிவராத்திரி, மார்கழி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம் போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்ற விழாக்களாகும். சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புகிறவர்கள் இந்த திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் பாடுவது நல்லது என கூறப்படுகிறது.
நடராஜன் நீராடிய திருக்குளம் என்றும் நலத்தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. ஜென்ம சனி, கண்ட சனி, அஸ்தமத்து சனி, மத்திய சனி, ஏழரை சனி என்று சனி பகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம்.
நளத்திருத்தத்தில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருக்கு மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்த துன்பமும் தீரும் என்பது ஐதீகம். சனி பகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தில் எல்லா நாட்களிலும் வரும் சனிஹோரை நேரத்திலும் வழிபடலாம்.
டாபிக்ஸ்