Masilamaneeswarar temple: 23 கல்வெட்டுகள் அமையப்பெற்ற தலம்!
தொண்டை நாட்டு பாடல் பெற்ற மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 தலங்களில் 22 ஆவது தலமாக ஸ்ரீ கொடிக்கடை நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் விளக்குகிறது. வானன், ஓனன் என்ற இரண்டு குரும்பர்கள் திருமுல்லைவாயில் காட்டில் மரணம் அமைத்து நாட்டு மக்களை துன்புறுத்தி வந்தனர்.
தொண்டைமான் எனும் மாமன்னன் குரும்பர்களை ஒடுக்கும் பொருட்டு திருமுல்லைவாயில் திரும்பும்போது அரசனுடைய யானையின் கால்களில் முல்லை கொடிகள் சுற்றி கொண்டன. மன்னன் தன்னுடைய வாளினால் கொடிகளை வெட்ட ரத்தம் பிரிட்டு கொட்டியது.
கொடிகளை வெட்ட நினைத்த சிவலிங்கத்தை வெட்டியதால் பதறிப்போன தொண்டைமான் தான் செய்த தவற்றை எண்ணி தன்னை மாய்த்துக்கொள்ள நினைத்தபோது இறைவன் வெளிப்பட்டு தான் வெட்டப்பட்டாலும் மாசில்லா மணியாக விளங்குவேன் என்று கூறி அருள் புரிந்தார்.
நந்தியும் பெருமானை அரசருக்கு துணையாக அனுப்பி பகைவர்களை வெல்லுமாறு செய்ததால் வெற்றி பெற்ற அரசன் குரும்பர்களின் கோட்டையை அழித்து அங்கிருந்த இரண்டு வெள்ளருக்கும் தூண்களை எடுத்து ஸ்ரீ மாசிலாமணிஸ்வரருக்கு திருமுல்லைவாயிலில் கோயிலை கட்டினார்.
கோயிலில் மூலவராகவும் உற்சவராகவும் மாசிலாமணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அம்பாளாக கொடியிடை நாயகி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இக்கோயிலின் தல மரமாக முல்லைக்கொடி அமைந்திருக்கிறது. இக்கோயிலில் ராஜகோபுரத்திற்கு முன்பாக 16 கால் மண்டபம் பல்வேறு தெய்வங்களின் சிற்பங்களை அழகிய வடிவுடன் அமைந்திருக்கிறது.
ராஜகோபுரத்தின் வழியாக சென்றால் பிரசன்ன கணபதியையும், அவருக்கு பின்னால் தல வரலாற்று சிற்பம் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சுமார் 23 கல்வெட்டுகள் அமையப்பெற்றுள்ளது. வைகாசி பிரம்மோற்சவம், மாசி விழா, ஆடியில் வசந்த உற்சவம், சித்ரா பௌர்ணமி நிஜ ரூப தரிசனம் போன்றவை விழாவாக கொண்டாடப்படுகிறது.