திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில்!

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2022 05:30 PM IST

அக்னி பகவான் ஈஸ்வரனை வழிபட்டு எல்லா விதமான நலன்களையும் பெற்ற இடம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில்.

<p>பொங்கு சனீஸ்வரர் கோயில்</p>
<p>பொங்கு சனீஸ்வரர் கோயில்</p>

மிக உயர்ந்த சிவபெருமான் திருக்கொள்ளிக்காடு என்கின்ற அற்புதமான தலத்தில் வீற்றிருந்து அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். திருவாரூர், திருத்துறைப்பூண்டி சாலையில், கச்சனம் நால் ரோட்டிற்கு மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருக்கொள்ளிக்காடு என்ற அற்புதமான திருத்தலம்.

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சாலை வழியாகவும் மினிபஸ் மூலமும் இவ்வாலயத்திற்குச் சென்றடையலாம். அக்னி பகவான் ஈசனை வழிபட்ட தலம் இந்த தலம். அதனால்தான் இதற்கு திருக்கொள்ளிக்காடு என்கின்ற நாமம் அமைந்திருக்கிறது.

அக்னி என்பதை நாம் தமிழில் கொள்ளி என்று அழைப்போம். அப்படி மிக உயர்ந்த அந்த அக்னி பகவான் ஈஸ்வரனை வழிபட்டு எல்லா விதமான நலன்களையும் பெற்ற இடம். அப்படிப்பட்ட இந்த தலத்தில் தான் சனீஸ்வர பகவான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரன் என்று சொல்லக்கூடிய ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலம்.

ஈஸ்வர பட்டம் என்பது மிக உயர்ந்த பட்டம். இதைப் பல காலம் தவம் செய்து இறைவனை இடத்திலேயே இருந்து பெற வேண்டும். அப்படி இறைவனிடத்தில் தவம் செய்து இத்தலத்தில் அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார் சனீஸ்வரன்.

மகாலட்சுமியின் திருவருளைத் தரவல்லது வன்னிமரம். அதுவே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக அமைந்துள்ளது. சாதாரணமாகக் கோயில்களில் ஒன்பது கிரகங்களும் ஒன்றாக இடம் பெறுவார் சனீஸ்வரன். இங்கே ஒன்றை ஒன்று பார்க்காத வண்ணம் ப வடிவில் இடம்பெற்றுள்ளது இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்

ஆனால் இந்த தலத்தில் மகாலட்சுமியின் ஸ்தானத்திலிருந்த படி பொங்கு சனீஸ்வரராக நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். பொன்னும், பொருளும், போகமும் வழங்கிடும் புண்ணியமூர்த்தியாகச் சனிபகவான் இடம்பெற்றிருப்பது இத் திருக்கோயிலில் சிறப்பு அம்சமாகும்.

சனிபகவானுக்கு எதிரிலேயே பைரவர் சன்னதியும் உள்ளது. சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டமும் வழங்கி நன்மை அனைத்தையும் நல்கிடும் நன்னனாக மாறிய தலம் இதுவே. நமது பாவங்களையும் இன்னல்களையும் சுட்டெரித்து சுடரொளியாக மேற்கு திசை நோக்கி இங்கே அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.

பஞ்சிலும் மெல்லடி அம்மாள் இதுதான் இங்கே இருக்கும் தாயாரின் திருநாமம். விநாயகர், முருகப்பெருமான் என்று தனித்தனி சன்னதிகளும் இங்குச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

சனிபகவானுக்கு மிகவும் விருப்பமான எள்ளுச் சாதம், கரு நாவல்பழம், உளுந்து, கருநீலப் பட்டு, இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஆகியவற்றை நிவேதனம் செய்தால் பொங்கு சனீஸ்வரர் நம் வாழ்வில் பூரண நலன்களையும் வாரி வாரி வழங்குவார்.

Whats_app_banner