Azhagu Muthu Ayyanar: வேண்டிதலை நிறைவேற்றும் அழகு முத்து அய்யனார்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Azhagu Muthu Ayyanar: வேண்டிதலை நிறைவேற்றும் அழகு முத்து அய்யனார்!

Azhagu Muthu Ayyanar: வேண்டிதலை நிறைவேற்றும் அழகு முத்து அய்யனார்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 09, 2023 04:35 PM IST

பக்தர்கள் வேண்டிக்கொண்டு அழகு முத்து அய்யனார் கையில் சீட்டு எழுதிக் கட்டி விட்டுச் செல்கின்றனர்.

அழகு முத்து அய்யனார் கோயில்
அழகு முத்து அய்யனார் கோயில்

திருமணத்தடை நீங்கவும், வீடு கட்டவும், உடல் நலக் குறைபாடு நீங்கவும், வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் பக்தர்கள் வேண்டிக்கொண்டு அழகு முத்து அய்யனார் கையில் சீட்டு எழுதிக் கட்டி விட்டுச் செல்கின்றனர்.

பின்னர் கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடனாகச் சிலைகளைச் செய்து வைக்கின்றனர். இக்கோயிலுக்குப் புதுச்சேரி மற்றும் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அனைவரும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் கோயிலாக இந்த தலம் விளங்கி வருகிறது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அழகன் சித்தர் ஜல சமாதியும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.

இக்கோயிலுக்கு வருகை புரிந்த அழகு சித்தர் அழகு முத்து அய்யனார் கோயில் பின்புறத்தில் உள்ள கிணற்றில் ஜல சமாதி அடைந்தார். ஜல சமாதிக்கு மேல் உள்ள கூரையில் மூடினால் மீண்டும் தானாகவே திறந்து கொள்வதால் இதுவரை மூடாமல் வைத்திருப்பதாக இக்கோயில் நிர்வாகிகளும், ஊர் மக்களும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் குயவர் ஒருவர் களிமண்ணால் செய்து வைத்த குதிரை இன்றும் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்