திருமணம், குழந்தை பாக்கியம் தரும் முத்துமாரியம்மன்!
திருமண பாக்கியம் தரும் தாயமங்கலம் ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் என்பது பெண்களுக்கு சமூகத்தில் பெரும் பெயர்களை பெற்று தரக்கூடியதாகும். இதனைப் பெற முடியாதவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர்.
இது போன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்யும் கடவுளாகும் சிவகங்கையில் குடிகொண்டிருக்கிறார் முத்துமாரியம்மன். சிவகங்கையில் இருந்து இளையான்குடி செல்லும் வழியில் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தாயமங்கலம் என்கிற கிராமம்.
கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் அமையும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்தக் கோயிலின் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது.
இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் முத்து மாரியம்மன் கன்னி தெய்வமாக அந்த கிராமத்தில் தாயாக விளங்கி வருகிறார். தாய்மங்கலம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பேச்சுவழக்கில் தாயமங்கலம் என்று மாறியது.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்த பொருட்களை அறுவடை செய்தவுடன் அம்மனுக்கு காணிக்கையாக படைக்கின்றனர். அப்படி காணிக்கையாக்கினால் மேலும் விவசாயம் பெருகும் என அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோயிலுக்கு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சென்று பூஜை செய்து, தீர்த்தத்தை வாங்கி பழகினால் நோய்கள் மீண்டும் என்பது நம்பிக்கை.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம்
இளம் பெண்கள் திருமணம் நடக்க வேண்டி தாலி பொட்டை முத்துமாரியம்மன் என் காலடியில் வைத்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம் ஆகும்.
இந்தக் கோயிலில் இருக்கும் வில்வம் மற்றும் வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி முத்துமாரியம்மன் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
வேண்டுதல் நிறைவேறிய பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். திருமணம் மற்றும் குழந்தை வேண்டி இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் கட்டாயம் நிறைவேறும் என அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.