Abhirami Temple: மூவரால் பாடல் பெற்ற தலம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Abhirami Temple: மூவரால் பாடல் பெற்ற தலம்!

Abhirami Temple: மூவரால் பாடல் பெற்ற தலம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2023 07:23 PM IST

திருக்கடையூரில் தர்மபுரம் ஆதினத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது

ஸ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வரர்
ஸ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வரர்

தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 27 ஆலயங்களில் ஒன்றான இந்த தலம் இறைவன் மார்க்கண்டேயிற்காக கால சம்ஹார மூர்த்தியாக வெளிப்பட்டு அருளிய சிறப்புடையது. ஞான சம்பந்தர், அப்பர், சுந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமை இந்த தலத்திற்கு உண்டு.

கொங்கிலிய கலைஞர் காரி நாயனார் ஆகியோர் வாழ்ந்து தொண்டாற்றி முக்தியடைந்த திருத்தலமாக இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி பாடல்களை கேட்டு அபிராமி அம்பாள் ஸ்ரீ சக்கரத்தாடங்கத்தை வீசி அமாவாசையை முழுமதி நாளாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலமாகவும் இது விளங்குகிறது.

தேவாசுரர் திருப்பாற்கடலை கடைந்து எடுத்த அமுத குடமே அமிர்தகடேஸ்வரராக இங்கு விளங்குகிறார். சஷ்சியத்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விழாக்கள் எங்கு நடந்தாலும் மக்களால் சிறப்பாக வழிபட பெறுபவர் இந்த மூர்த்தி ஆவார்.

இதனால் அரசு துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் என அனைவரும் இத்தலத்திற்கு வந்து வணங்கி பயன் அடைந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் நடைபெறும் கால சம்ஹார ஐதீக விழா தேரோட்டம் மற்றும் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் 1008 சங்காபிஷேக விழாவும் புகழ்பெற்ற விழாவாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்