Angala Parameswari Temple: அம்மன் போல வேடமிட்டு வரும் பக்தர்கள்!
அகோர கோலத்துடன் சுடுகாட்டுக்குச் செல்லும் அங்காளிக்கு பக்தர்கள் தேங்காயில் நெய் நிரப்பி தீபாரதனை காட்டுவது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
திருவண்ணாமலை அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உலகப்பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று. தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இன்றும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதுண்டு.
தாங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தர்கள் இரவு முழுவதும் இந்த கோயிலில் தங்குவது வழக்கம். அங்காளம்மன் ஆலயம் அருகே தரையில் வீற்றிருக்கும் பெரியாயி அம்மனிடம் சென்று வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்பது மக்களின் நம்பிக்கை.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உற்சவ நாட்களில் அம்மன் போன்ற வேடமிட்டு பக்தர்கள் வருவது வழக்கமான ஒன்று. கிட்சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என சக்திகளை கொண்டு சடை முடியுடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர்ந்த இடம் தான் மேல்மலையனூர் என தல வரலாறு கூறுகிறது.
சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பார்வதி தேவியை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டதற்கு, தங்கள் அங்கத்தில் இடம்பாக தரவேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி சிவபெருமான் தன்னுடைய இடபாகத்தை தந்ததினால் அங்கமாலும் சக்தியாக உருவெடுத்ததை அங்கால பரமேஸ்வரி என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி அமாவாசை அன்று அகோர கோலத்துடன் சுடுகாட்டுக்குச் செல்ல அங்காளிக்கு பக்தர்கள் தேங்காயில் நெய் நிரப்பி தீபாரதனை காட்டுவது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.