புதுச்சேரி பிரமிடு நடராஜர் கோயில்!
புதுச்சேரி பிரமிடு வடிவ நடராஜர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
இந்து கோயில்களில் என்றாலே வழக்கமாகக் கலசங்கள் கோபுரத்துடன் கூடிய கோயில்களைத் தான் பார்க்க முடியும். ஆனால் இதற்கு மாறாகப் புதுச்சேரி அருகே பிரமிடு வடிவில் நடராஜருக்குக் கோயில் அமைந்திருப்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுக்குப்பம் என்ற கடற்கரை கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கார்னேஸ்வரர் நடராஜர் கோயில். உறுதியான செம்மண் கற்களைக் கொண்டு எழுப்பப்பட்டு இருக்கும் இந்த கோயிலில் பெரிய பிரமிடுகளைப் போன்று 50 டிகிரி 51 அங்குலம் என்ற கோண அளவுபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவறையில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் பிரபஞ்சம் நடன தோற்றத்தில் காட்சி தருகிறார். கோயிலுக்கு வெளியே பிரமாண்டமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு முன்பாக நந்தி பெருமானும் அருள்பாலிக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் சிறந்த சிவ பத்திரமான கரண்சிங் இந்த கோயிலைக் கடந்த 2000 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் இந்த கோயிலுக்குச் சென்றால் நடராஜரின் தரிசனத்தோடு சேர்த்து தியானமும் செய்யலாம்.
பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்யும் போது நமக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. ஆம் பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வைத்துக்கொள்ளும் சக்தி பிரமிடுகளுக்கு உண்டு. அதனால் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்யும்போது பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிப்பதுடன் நாம் செய்யும் தியானத்தின் பலனையும் விரைவிலேயே அனுபவப்பூர்வமாக உணரலாம்.
நாள்தோறும் கோயிலில் வழிபாடு நடத்துவதைப் போல் காலை மாலை என இரு வேலைகளிலும் நடராஜருக்குப் பூஜை நடத்தப்படுகிறது. நடராஜரின் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாகத் தியானமும் கற்றுத் தரப்படுகிறது. கடற்கரை அருகே அமைதியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமிட் கோயில் ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டுமாகவும் திகழ்கிறது என்று சொல்லலாம்.
கோயிலில் உள்ள மூலவர் நடராஜர் முகத்தில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி படுவதும், நடராஜரின் வலது காதில் ஆண் அணியும் தோடும் இடது காலில் பெண்கள் அதிகம் தோடும் அணிந்திருப்பது இந்த கோயிலில் மற்றொரு சிறப்பு என்று கூறலாம். கோயிலில் தரிசனம் செய்யும் போது மன அமைதி மட்டுமல்லாமல் நினைத்த காரியங்கள் வெற்றி பெறுவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.