Perumulai Muthaiya Temple: தொன்மை வாய்ந்த முத்தையா கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Perumulai Muthaiya Temple: தொன்மை வாய்ந்த முத்தையா கோயில்!

Perumulai Muthaiya Temple: தொன்மை வாய்ந்த முத்தையா கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 06, 2022 03:44 PM IST

திட்டக்குடி அருள்மிகு பெருமுளை முத்தையா சுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

<p>பெருமுளை முத்தையா கோயில்</p>
<p>பெருமுளை முத்தையா கோயில்</p>

பல காலங்களுக்கு முன்பே விருத்தகிரி என்றும் பழமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தலம் பெருமுளை, சிறு முளை, பூமாலை, செம்மலை எனும் மலைகளாக இருந்து தொன்மை வாய்ந்தது. இந்த ஸ்ரீ வள்ளி தெய்வம் சமேத முத்தையா சுவாமி என்ற திருநாமத்துடன் சுவாமி பக்த கோடிகள் உய்யும் பொருட்டு அமைந்துள்ளார்.

பச்சையம்மன் இடது கையில் குங்குமம் ஏந்தியும், வலது கையில் தாமரைப் பூவும் கொண்டு அருள்பாலித்து அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இங்கு இவர் மயில்வாகனம் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் மட்டும் வெள்ளை யானை ஐராவதம் வாகனமாக அமைந்துள்ளது. திருஉச்சிரவம் என்னும் வெள்ளைக் குதிரையும் இந்த சன்னிதானத்தில் அமையப் பெற்றுள்ளது.

முத்தையா சுவாமி சன்னதி அருகே செம்மலயப்பா, முத்தையா, இராயப்பா, அருவா சம்பா உனை கொண்ட காட்சி, பச்சையம்மன் சன்னதி அதே வளாகத்தில் பேச்சியம்மன், பூங்காளம்மன், காத்தாலம்மன், மருளாளம்மன், சகோதர வீரபத்திர சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளது.

இக்கோயிலின் நுழைவாயிலில் நந்திகேஸ்வரரும், பலிபீடமும் அமைந்துள்ளன. முத்தையா சுவாமிக்கு வலது புறம் முனீஸ்வர சுவாமிகள் அமையப் பெற்றுள்ளனர். அமிர்த குன்று என்று அழைக்கப்படும் ஆழ்கிணறு, இராயப்பா சன்னதி, தொட்டிய தான் சுவாமி சன்னதியும் அமைந்துள்ளது.

Whats_app_banner