Srimad Pamban Swamy: ஆறெழுத்து மந்திர நூலை இயற்றிய சுவாமி!
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிக்கு வங்க கடலோரம் மகா சமாதி அமைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன் வலசையில் ஸ்ரீமத் பாம்பஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய குமரகுரு தாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டை தீவிரமாக்கிய மகான்.
சுவாமிகள் தமது 46வது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன் வலசை என்னும் ஊரினை தவம் புரிய தேர்வு செய்து அவ்வூரில் உள்ள மயான பூமியில் ஒரு குழி அமைக்க செய்தார். குமரவேலை தரிசித்தால் அன்றி இனி மாலும் இவ்வுடல் கொண்டு வீலேன் என்று சூழரைத்து தவத்தை தொடங்கினார்.
ஆறு நாட்கள் பழனி கடவுளை உள்ளத்தில் நிறுத்தி கடும் தவம் புரிந்த இவருக்கு ஏழாம் நாளில் தண்டாயுதபாரியின் தரிசனத்தையும் ஓரெழுத்து உபதேசத்தையும் அருளினார் முருகப்பெருமான். முருகப்பெருமானுடன் அகத்தியரையும், அருணகிரிநாதரையும் கண்டு தரிசித்தால் பாம்பன் சுவாமிகள்.
பாம்பன் சுவாமி 6666 பாடல்களையும், 32 வியாசகங்களையும் எழுதி முருகப்பெருமானை கொண்டாடினார். தமிழகம் மட்டும் இன்றி வெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜெகன்நாதம், கல்கத்தா, கயா என்று காசிவரை திருத்தலை யாத்திரை மேற்கொண்ட பாம்பன் சுவாமிக்கு 1918 ஆம் ஆண்டு வெப்பநோய் பாதிப்பு ஏற்பட்டது.
அந்நேரம் குமாரஸ்தவம் எனும் ஆறெழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்த பாடலால் பூரண குணமும் பெற்றார் பாம்பன் சுவாமி. “ஓம் சண்முக பதையே நமோ நம” என தொடங்கும் இந்த மந்திர பாடல்களை பாடுவோர் சண்முக பெருமாள் இரு தேவியர்களோடு மயில் மீது அமர்ந்த காட்சியை தரிசிப்பார்கள் என சுவாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.
1929 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி காலை 7.15 க்கு பாம்பன் சுவாமிகள் மகா சமாதி அடைந்தார். அடுத்த நாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அவர் விதித்தபடி வங்க கடலோரம் சென்னை திருவான்மியூரில் சுவாமிகளின் திருஉடல் அடக்கம் செய்யப்பட்டு மகா சமாதியும் அமைக்கப்பட்டது.