Ujjaini Makali Amman: ஆதிசக்தி உஜ்ஜயினி மகாகாளியம்மன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ujjaini Makali Amman: ஆதிசக்தி உஜ்ஜயினி மகாகாளியம்மன்!

Ujjaini Makali Amman: ஆதிசக்தி உஜ்ஜயினி மகாகாளியம்மன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 27, 2022 11:36 AM IST

ராமரின் நேரடி பார்வையில் அமர்ந்திருந்து உஜ்ஜயினி மகாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

உஜ்ஜயினி மகாகாளியம்மன்
உஜ்ஜயினி மகாகாளியம்மன்

இலங்கையில் அனுப்பிய பச்சை கலசம் ராமேஸ்வரம் பகுதிக்கு கடந்த 400 வருடங்களுக்கு முன்பு மிதந்து வந்துள்ளது. கலசத்தை மீட்ட கோயில் பூசாரி கலசத்தைக் கொண்டு நடந்து வரும்போது அந்த கலசம் நின்ற இடம் தான் உச்சி புள்ளியில் உள்ள நாகாட்சி அம்மன் கோயில்.

பின் அந்த கலசம் அமர்ந்த இடம் தான் தில்லை நாச்சியம்மன் கோயில். சுடாத களிமண்ணால் உருவாக்கப்பட்டு கடலில் மிதந்து வந்த பச்சை கலசத்தை மட்டும் ஆஞ்சநேயர் சன்னதியிலும் பின் உஜ்ஜயினி அம்மனை கடற்கரையோரமான சன்னதி தெருவிலும் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நவராத்திரி திருவிழா கோயிலில் நடைபெறுகின்றன. ஆஞ்சநேயர் சன்னதியில் உள்ள சுடாத களிமண்ணால் உருவாக்கப்பட்டு கடலில் மிதந்து வந்த கலசத்தை உஜ்ஜயினி அம்மனிடம் வழங்கி நவராத்திரி விழாவான இறுதி நாளில் உஜ்ஜயினி அம்மன் ராமேஸ்வரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ராமநாதசுவாமி கோயிலின் எதிர்புறத்தில் ராமரின் நேரடி பார்வையில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார் உஜ்ஜயினி மகாகாளியம்மன்.

Whats_app_banner