Sri Narayana Swamy: அணையா விளக்காய் இருக்கும் ஸ்ரீ நாராயண சுவாமி!
பழமையான ஆலயமான ஸ்ரீ நாராயண சுவாமி சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏறுக்கி மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கி வருகின்றது ஸ்ரீ நாராயணசாமி ஆலயம். இவ்வாலயத்தில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார்.
ஸ்ரீ பத்ரகாளியம்மன், லிங்கேஸ்வரர், மகா கணபதி, கால பைரவர், குபேரர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், மாடசாமி, ஆஞ்சநேயர், அய்யனார், பூரண புஷ்கலாவுடன் மூலவர் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் உள்ளிட்ட சுமார் 27 பரிவார தெய்வங்களுடன் தனித்தனி சன்னதியிலும் நவக்கிரகங்களும் இவ்விடம் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றன.
இவ்வாலயத்தில் ஆடி மாத உற்சவத்தில் கரகம் எடுத்து ஊர்வலம் நடத்தி வழிபடும் வழக்கம் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகின்றது. புரட்டாசி மாதம் இங்கு சிறப்பு உற்சவ திருவிழா நடைபெற்ற வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே ஸ்ரீ குபேர லட்சுமி ஆலயம் உள்ள தனி சன்னதி இவ்வாலயத்தில் உள்ளது சிறப்பு அம்சமாகும்.
இங்கு பக்தர்கள் பச்சை கயிறு கயிறு கட்டியும், பச்சை குங்குமம் நெற்றியில் எட்டும் சிறப்பு வழிபாடு நடத்தினால் செல்வம் பெருகும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இக்கோயிலில் முகப்பில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடம் பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடனுக்காக அணையா விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்கி செல்வம் பெருகுவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.