அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் சிறப்புகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் சிறப்புகள்

அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் சிறப்புகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 08, 2022 07:44 PM IST

பெருமுளை அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

<p>முத்தையா சுவாமி திருக்கோயில்</p>
<p>முத்தையா சுவாமி திருக்கோயில்</p>

மலைகள் குன்றுகள் எல்லாம் சிவக்குமரன் விளங்கும் உறைவிடம். பன்நெடுங்காலங்களுக்கு முன்பே விருத்தகிரி என்றும் பழமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

இத்தலம் பெருமுளை, சிறுமுளை, பூமாலை, செம்மலை எனும் மலைகளாக இருந்து தொன்மை வாய்ந்தது. இந்த ஸ்ரீ வள்ளி தெய்வ குக்சரி சமேத முத்தையா சுவாமி என்ற திருநாமத்துடன் சுவாமி பக்த கோடிகள் உய்யும் பொருட்டு அமைத்துள்ளார்.

பச்சையம்மன் இடது கையில் குங்குமம் ஏந்தியும், வலது கையில் தாமரைப் பூவும் கொண்டு அருள்பாலித்து அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்கோயிலில் உள்ள முருகன் மயில்வாகனம் கொண்டு காட்சியளிக்கிறார். இக்கோயிலில் மட்டும் வெள்ளை யானை அயராவததும் வாகனமாக அமைந்துள்ளது.

திரு உச்சிரவம் எனும் வெள்ளைக் குதிரையும் இந்த சன்னிதானத்தில் அமையப் பெற்றுள்ளது. முத்தையா சுவாமி சன்னதி அருகே செம்மலயப்பா, முத்தையா ராய், அப்பா, அருவர், சம்பா உடை கொண்ட காட்சி, பச்சைய அம்மன் சன்னதி, அதே வளாகத்தில் பேச்சியம்மன், பூங்காளம்மன், காத்தாலம்மன், மருளாளம்மன், அகோதர வீரபத்ர சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளது.

இக்கோயிலின் நுழைவு வாயிலில் நந்தியும், பலிபீடமும் அமைந்துள்ளது. மறுபுறம் முனீஸ்வர சுவாமிகள் அமையப் பெற்றுள்ளனர். மேலும் ராயப்பா சன்னதி தொட்டியத்தான் சுவாமி சன்னதியும் அமைந்துள்ளது.

Whats_app_banner