Thirunageswarar Temple: அழகு சிற்பங்கள் கொண்ட தலம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thirunageswarar Temple: அழகு சிற்பங்கள் கொண்ட தலம்!

Thirunageswarar Temple: அழகு சிற்பங்கள் கொண்ட தலம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 28, 2022 03:00 PM IST

1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் சிவதலமான திருநாகேஸ்வரர் திருக்கோயில் ஆன்மீகம் மற்றும் கலைகளின் கருவூலமாக திகழ்கிறது.

திருநாகேஸ்வரர் திருக்கோயில்
திருநாகேஸ்வரர் திருக்கோயில்

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த நாகர் மன்னரே இக்கோயிலை காண்பூர் இயக்கம் வண்ணம் வடிவமைத்தார். திருநாகேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கியும் சிவகாமி அம்பாளின் சன்னதி தெற்கு நோக்கியும் காணப்படுகின்றன.

கோயிலின் தெற்கு வாசலில் பிரதான வாசலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாசல் வழியாகவே பக்தர்கள் சென்று சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டு வருகின்றன. கோயிலுக்குள் நுழைந்ததும் பழமையை பறைசாற்றும் வகையில் மகா மண்டபமும், வசந்த மண்டபமும் காணப்படுகின்றது.

கோயிலை சுற்றி வலம் வர முற்ற காலமும் வெளிப்பகாரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் உற்றகாரத்தில் முழுமுதற் கடவுளான விநாயகர் காட்சி தருகின்றார். மற்றொரு புறம் ஆறுமுக கடவுளான முருகப்பெருமானும் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கின்றார். சுரதேவர், சண்டிகேஸ்வரரும் சன்னதிகள் கொண்டுள்ளனர்.

இங்கு உள்ள சிற்பங்கள் கண்களை கவரும் வகையில் மிகுந்த கலை நுட்பங்களுடன் ஜொலிக்கின்றன. திருநாகேஸ்வரரை நோக்கியவாறு நந்தியம் பெருமான் எழுந்தருளியுள்ளார். இந்த திருத்தலத்தில் ராஜகோபுரம் இல்லாமல் சுவாமியும் அம்பாலும் வீற்றிருக்கும் சன்னதிகளில் கோபுரங்கள் காணப்படுகிறது.

கிழக்கு வாசல் வழியாக வந்தால் கொடி மர மண்டபத்தை காணலாம். கொடிமரத்தின் வடக்கு பக்கம் நவக்கிரகங்களின் சன்னதி தனியாக அமையப்பெற்றுள்ளது. சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், சிவ கணங்கள், துவாரக பாலகர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு.

ஆருத்ர தரிசன விழா, சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி விழா, திரு கார்த்திகை, தீப விழா, திருவாசகம் முற்றோறுதல் விழா, பிரதோஷ விழாக்கள் இங்கு விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்ட திருவிழா 10 நாட்கள் கோலாகலத்துடன் இந்த திருக்கோயிலில் நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளம் வற்றாது என்பது இக்கோயிலின் தனி சிறப்பாகும்.

Whats_app_banner