Kalyanasundaresar Temple: திருமணத்தடை போக்கும் கல்யாணசுந்தரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kalyanasundaresar Temple: திருமணத்தடை போக்கும் கல்யாணசுந்தரர்!

Kalyanasundaresar Temple: திருமணத்தடை போக்கும் கல்யாணசுந்தரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 24, 2022 05:10 PM IST

திருமணத்தடையை நீக்கும் நல்லூர் ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோயில்
ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோயில்

இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கத் திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். இவருடன் அம்பாள் கிரி சுந்தரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.

வழிபாடு முறை

நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருக்கும் ஆண் மற்றும் பெண் இந்த கோயிலுக்கு வந்து நறுமணம் வீசும் மலர்களை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்ற வேண்டும். பெண் ஒரு மாலையை வாங்கி தான் அணிந்து கொண்டு அந்த பிரகாரத்தை வளம் வந்து வழிபட்டு சென்றான் தடை பட்ட திருமணம் விரைவில் அரங்கேறும் என தல வரலாறு கூறுகிறது.

இக்கோயிலில் இருக்கும் தீர்த்தக் குளமானது சப்த சாகரம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் ஏழு கடல்களை குறிக்கும் ஏழு கிணறுகள் உள்ளது. இந்த தீர்த்த குளத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி 48 நாட்கள் நீராடி வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள பாபநாசம் அருகே நல்லூர் என்ற பகுதியில் உள்ளது. இ கோயிலுக்கு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

Whats_app_banner