Marudhamalai Subramanya Swami: மருதமலை மாமணியே முருகய்யா!
மருதமலையில் அருள்மிகு மருதாசல மூர்த்தியாக முருக பெருமான் காட்சியளிக்கின்றார்
கொங்கு வளநாட்டில் மங்கா புகலாக விளங்குகின்ற அனிமேட்டலை மருதமலையில் அருள்மிகு மருதாசல மூர்த்தியாக முருக பெருமான் காட்சியளிக்கின்றார். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இந்த மருதமலை கோயில்.
முருக பெருமான் தண்டாயுதபாணி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் தவம் செய்து சித்தி நிலையடைந்த கோயிலாக மருதமலை முருகன் கோயில் அமைந்திருக்கிறது. அசுரனின் கொடுமையில் இருந்து விடுபட தேவர்கள் தவக்கிணங்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பிழம்பாய் பிறந்த முருக பெருமானை தரிசிக்க சிவபெருமானை காமதேனும் கண்டு தரிசித்த இடத்திற்கு அருகில் உள்ள பேரூர் கோயிலுக்கு அருகில் நாரமுனி திருமாலிடம் கூறியுள்ளார்.
திருமாலின் தவத்தின் பலனாய் மலை வடிவமாக காட்சி கொடுத்த தலம் மருதமலை ஆதலால் கோயிலின் முன்புறம் திருமாலுக்கென தனிச் சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் அசுரனை வதம் செய்ய முருகப்பெருமான் செல்லும்போது உருவான குதிரையின் கால் குழம்பு தடம் இன்றளவும் இந்த மலையில் காணமுடிகிறது.
ராஜகோபுரம் நுழைவாயிலை நுழைந்ததும் கல்லாலான கொடிமரம், பின்னர் வலம்புரி விநாயகர், உலோகத்தால் செய்யப்பட்ட கொடிமரம், மயில்வாகனம், முன் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும், வீரபத்திரரும் கருவறையில் தண்டத்துடன் காட்சி தரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைய பெற்றிருக்கிறது.
மருதமலை கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம் தெய்வானையை விட சற்று உயரமாக காணப்படுகிறார்.
ஆதி மூலஸ்தான கருவறை விமானம் உள்ளது. இங்கிருக்கும் விநாயக பெருமான் வன்னி, அரசு, வேம்பு, அத்தி, கோரக்கட்டை எனப்படும் ஐந்து மரங்களுக்கு அடியில் கோயில் கொண்டிருப்பதால் பஞ்ச விருட்ச விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
மரகதாம்பிகை, நவ கிரகங்கள் சன்னதி அமைந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி லிங்கேஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் வெளி மண்டப சுவற்றில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. தைப்பூசம் நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மருதமரம் கோயிலின் தல விருட்சமாக உள்ளது.