Venkatteeswarar Temple: கண்கண்ட தெய்வம் வெண்காடீஸ்வரர்!
திருவெண்காடீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
தோல் நோய் தீர்க்கும் தலம் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் என பலரும் திருப்பணி செய்த ஆலயம். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குவது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள திருவெண்காடீஸ்வரர் ஆலயம்.
ஐந்து நிலை ராஜகோபுரம், அதன் எதிரி அழகிய திருக்குளமும் எழிலாக அமைந்துள்ளன. ராஜகோபுரத்திற்குள் நுழைந்தாள் கோபுர விநாயகர் பலிபீடம் கொடிமரம், நந்தி தேவர் என வழிபட்டு சென்றதும் வழிச்சுற்றில் தென்மேற்கு மூலையில் நடன கணபதியை வளம் வந்து உள்ளே நுழைந்தால் மீனாட்சியம்மனை தனிச்சன்னதியில் வணங்கலாம்.
மண்டபத்திற்கு உள்ளே கடந்ததும் துவாரபாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். விநாயகர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் பெருமான், வள்ளி தெய்வானை சமேத விஜய ஆறுமுகன், திருமால், பிரம்மா, சண்டீஸ்வரர், துர்க்கை ஆகியோர் அமைந்துள்ளனர். சன்னதியில் பல்லவர் கால சோமகண்டபதி சோமாஸ்கந்தர் ஆகியோர் உள்ளனர்.
கோயிலின் பின்புறத்தில் வெளி பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் அற்புதமாக இருக்கிறது. ஐந்து இதழ்களைக் கொண்ட கிண்ணம் கவிதை போல அற்புதமான பெயர் இந்த படத்தில் இருக்கக்கூடிய பூக்கள் எம்பெருமானுக்கு மிகவும் விசேஷமாக ஆராதனை கூறியதாக கூறப்படும் இந்த திருத்தலத்தின் தல மரமாக போற்றப்படுகிறது.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கு நான்கு விதமான பைரவர்கள் காட்சி தருகின்றனர். காலபைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என நால்வர் எழுந்தருளி உள்ளனர். பிணியில் வாடுவோரின் குறை தீர்ப்பது, தீராத சொத்து வழக்கு இவற்றுக்கு கண்கண்ட தெய்வமாக இவர்கள் விளங்குகின்றனர்.
நால்வர் குருபூஜை, சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம் ,ஆருத்ரா, தைப்பூசம், மாசி மகம், பிரதோஷம் என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
டாபிக்ஸ்