Jagannatha Perumal: பெருமாள் முன் நந்திபெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jagannatha Perumal: பெருமாள் முன் நந்திபெருமான்!

Jagannatha Perumal: பெருமாள் முன் நந்திபெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 28, 2022 05:21 PM IST

நாதன் கோயில் 108 திவ்ய தேசங்களில் 21 ஆவது தலமாக விளங்குகிறது

நாதன் கோயில்
நாதன் கோயில்

கோபுரத்தில் அருகில் வானுயர்ந்த கொடி மரத்தின் கீழ் கருடன் அமர்ந்துள்ளார். மூலவர் ஜெகநாத பெருமாள் மேற்கு நோக்கி வைகுண்டத்தில் உள்ளது போன்று ஸ்ரீதேவி, பூமி தேவி தாயாருடன் ஏக ஆசனத்தில் வீற்றிருந்த திருகோலத்தில் காட்சி அளிக்கிறார்.

செண்பகவல்லி தாயார் கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். திருப்பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அவதரித்த மகாலட்சுமி எம்பெருமாளை அடைய இத்தலத்தின் தவம் செய்ததாக தல புராணங்கள் கூறுகின்றன.

திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்யப்பட்ட இத்தலம் 108 திவ்ய தேசங்களில் 21 ஆவது தலமாக விளங்குகிறது. குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இத்தலத்தில் குழந்தை பெற இல்லாத தம்பதிகள் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவேதனம் செய்தால் குழந்தை பேறு கட்டும் என்பது ஐதீகம்.

மூலவர் சன்னதியில் நந்தி தேவர் ஜெகநாத பெருமாள் வணங்கியவாறு உள்ளது. எந்த ஒரு வைணவ தலத்திலும் இல்லாத சிறப்பு ஆகும். வைகாசி விசாக பெருவிழா 11 நாட்கள் இங்கு நடைபெறுகிறது. 

இத்திருவிழாவில் நான்காம் திருவிழாவாக கருட சேவை நிகழ்வும், ஏழாம் நாள் திருவிழாவாக திருக்கல்யாணம் புஷ்பயாகவும் நடைபெறுகிறது. பழமையான ஆலயத்தின் தல விருட்சமாக செண்பக மரம் உள்ளது. நந்தி தேவரால் இத்தலம் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையிலான ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது.

Whats_app_banner