Saraswathi Temple: சரஸ்வதி தேவிக்கென தனிக் கோயில்!
தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென தனியாக உள்ள ஒரே கோயில் கூத்தனூரில் உள்ளது.
பொதுவாக பெற தெய்வங்களுக்காக கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகவே சரஸ்வதி தேவியும் வழிபடப்படுகிறார். அவருக்கென தனிக்கோயில் இருப்பது மிகவும் அரிது. தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென தனியாக உள்ள ஒரே கோயில் இருப்பது கூத்தனூரில் உள்ள கோயில் மட்டுமே.
திருவாரூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பெரும் புலவராகிய ஒட்டக்கூத்தர் பிறந்த கூத்தனூர்.
சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வெகு விமர்சயாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி மற்றும் மகா நவமி நாட்களில் இங்கு செல்வது சிறப்பு. கர்ப்ப கிரக விமானம், கருணை கூடுகள் அன்றாடம் உள்ளிட்ட மாறுபட்ட விமானம் ஆகும்.
இத்தலத்தின் மூலவர் சரஸ்வதி, இவர் பத்மாசனத்தில் வலதுகில் கையில் சின் முத்திரையும் இடக்கையில் புத்தகமும் வலது மேல் கையில் அச்சரமாலையும் இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார் சரஸ்வதி.
ஜடாமுடியும், கருணை புரியும் இரு விழிகளும் ஞானசஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார் சரஸ்வதி. புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சாரதா நவராத்திரி 12 நாட்களுக்குப் பின் 10 நாள் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது. சுவாமிக்கு பௌர்ணமி மூல நட்சத்திரத்தில் மாதம் தோறும் சிறப்பு பூஜைகளும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பிலிருந்து 45 நாட்களுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
பிரம்மாவிற்கு அதிகமாக கோயில்கள் அமையாததால் மனைவியான சரஸ்வதிக்கும் இந்தியாவில் அதிக கோயில்கள் அமையாதது இயற்கையே. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலும் பிரம்மாவிற்கு சிலை இல்லை. இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார்.
இக்கோயில் ஒற்றை பிரகாரத்தை கொண்டது, ராஜகோபுரம் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பரம்பரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகியோர் வீற்றுள்ளனர் . ஒட்டக்கூத்தருக்கு சிலை உள்ளது, சரஸ்வதிக்கு முன்னாள் அன்ன வாகனம் உள்ளது. இதில் நடத்தற விநாயகர் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் திறந்திருக்கிறது.