Vanadurkaiyamman Temple: குலதெய்வம் இல்லாதவர்களுக்கு இதுவே தெய்வம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vanadurkaiyamman Temple: குலதெய்வம் இல்லாதவர்களுக்கு இதுவே தெய்வம்!

Vanadurkaiyamman Temple: குலதெய்வம் இல்லாதவர்களுக்கு இதுவே தெய்வம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 15, 2022 07:14 PM IST

கதிராமங்கலம் வனதுர்க்கையம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்.

வனதுர்க்கையம்மன் கோயில்
வனதுர்க்கையம்மன் கோயில்

தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கென தனி சன்னதி இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது. பொதுவாக கோயில்களில் துர்க்கை அம்மன் வழக்கு அல்லது தெற்கு நோக்கியே காட்சி தருவார். ஆனால் இங்குள்ள துர்கை கிழக்கு நோக்கி அமர்ந்து காட்சி அளிக்கிறார். அம்மனின் வலது கை சாய்த்து அபயகஸ்தம் வரதம் என இரண்டு முத்திரைகளை காட்டி அருள் பாலித்தது வேறு எந்த கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

நுழைவாயிலின் இருபுறங்களிலும் துவார பாலகிகள் உள்ளன. எல்லா கோயில்களிலும் உள்ள விநாயகர், முருகன் சிலைகள் இங்கு கிடையாது. அனைத்து நாட்களிலும் ராகு காலத்தில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

சித்திரை ஆடி மாதங்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம். குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகமும், எதிரிகளின் தொந்தரவு நீங்க குங்கும காப்பு சாட்சியும் செவ்வரளி அர்ச்சனை செய்தும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் திருமண தடைகள், குடும்ப பிரச்னைகள் நீங்குவதுடன் காரியங்கள் சுத்தி அடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.

Whats_app_banner