Kaala Devi Nera Temple: இரவில் மட்டுமே தரிசனம் தரும் காலதேவி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kaala Devi Nera Temple: இரவில் மட்டுமே தரிசனம் தரும் காலதேவி

Kaala Devi Nera Temple: இரவில் மட்டுமே தரிசனம் தரும் காலதேவி

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 27, 2022 02:23 PM IST

இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசய மதுரை காலதேவி கோயில் ( Kaala Devi Nera temple) குறித்து இங்கே காண்போம்.

மதுரை காலதேவி கோயில்
மதுரை காலதேவி கோயில்

ஒருவரின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நேரத்திற்காக ஒரு கோவில் இருக்கிறது. அதுவும் நமது ஊரில் அக்கோயில் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது.

கோயிலின் கோபுரத்தில் நேரமே உலகம் என்ற வாசகம் எழுப்பப்படுகிறது. புராணங்களில் வரும் கால ராத்திரியைத் தான் இங்கு காலதேவியாக வணங்குகிறார்கள். இவர் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

காத்தல், அழித்தல், பஞ்சபூதங்கள், நவகிரகங்கள், நட்சத்திரங்கள் என முப்பத்து முக்கோடி தேவர்களையும் இயக்கும் சக்தி கால தேவிக்கு உண்டு. நேரத்தில் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியும் என்பது தான் இக்கோயிலின் தத்துவமாகும்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக இங்கு நடை திறந்திருக்கும் ஒரு கோயில் என்றால் உலகிலேயே இது ஒன்றுதான்.

பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இங்குப் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். காலதேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. சுற்றி வந்து காலசக்கரத்தின் முன் அமர்ந்து, 11 வினாடிகள் தரிசித்தாலே போதும் எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என்று வேண்டினால் போதும் வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

செல்லும் வழி

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம் சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி, கோயிலுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம். சாதாரண நாட்களில் செல்வதை விடப் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வது சிறப்பாகும். இரவு நேரக் கோயில் என்பதால் கோயிலுக்கு வசதியாகச் செல்லும் வழி கிடையாது.

Whats_app_banner