Ramar patham temple: ராமர் ஆலோசனை செய்த தலம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ramar Patham Temple: ராமர் ஆலோசனை செய்த தலம்!

Ramar patham temple: ராமர் ஆலோசனை செய்த தலம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 12, 2022 07:52 PM IST

ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் குறித்து இங்கே காண்போம்.

ராமர் பாதம் கோயில்
ராமர் பாதம் கோயில்

ராமர் நின்ற இடத்தில் இவரது இரு பாதத்தை வைத்து பூஜைக்கு முடிவு செய்த விஜய் நகர சாம்ராஜ்யம் மன்னர்கள் 1480 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாத கோயிலை உருவாக்கி தரிசனம் செய்தனர். நிலமட்டதில் இருந்து 60 கிமீ உயரத்தில் மணல்மேட்டில் அமைந்துள்ள இந்த கோயில் சுண்ணாம்பு பவளப்பாறைகளால் கட்டப்பட்டது.

ராமேஸ்வரத்தில் 530 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளிக்கும் ராமர் பாதம் அமைந்துள்ள இந்த கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கெந்த மாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில் ராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் மூலவர் ராமநாதசுவாமி என அழைக்கப்படுகின்றார். தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். சீதையை ராவணன் சிறைபிடித்து சென்றதும் அவரை மீட்க தனுஷ்கோடி இருந்து இலங்கைக்கு ஸ்ரீராமரும், அனுமரும், வானர சேனைகளும் பாலம் அமைத்தனர்.

இக்கட்டுமான பணியை ராமபிரானோ ராமேஸ்வரத்தில் கெந்த மாதன பர்வதம் அதாவது உயரமான மணல் தொட்டில் நின்று பார்த்ததாக கூறப்படுகின்றது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து ராமரின் பாதத்தை வழிபட்டு செல்கின்றனர்.

Whats_app_banner