காசிபாளையம் 36 அடி உயர பாலமுருகன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காசிபாளையம் 36 அடி உயர பாலமுருகன்

காசிபாளையம் 36 அடி உயர பாலமுருகன்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 07, 2022 06:34 PM IST

காசிபாளையம் பாலமுருகன் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

<p>காசிபாளையம் பாலமுருகன் திருக்கோயில்</p>
<p>காசிபாளையம் பாலமுருகன் திருக்கோயில்</p>

கோயிலின் மலை அடிவாரத்தில் நிலை கோபுரம் அருகே செல்வ விநாயகர் கோயில் அமையப் பெற்றுள்ளது. மலைக் கோயிலின் முதல் 35 படிக்கட்டுகளை ஏறிச் சென்றால் இடப்புறம் இடும்பன் காட்சி தருகிறார். இடும்பனின் ஆலயத்திலிருந்து 30 படிக்கட்டுகளைக் கடந்து சென்றால் முருகன் ஆலய நிலை காணப்படுகின்றது.

கோயிலில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமையப்பெற்றுள்ளது. மகா மண்டபத்தின் தென்கிழக்கு பகுதியில் பொங்கல் மணமும், தென்மேற்கு கிழக்கு நோக்கி விநாயகர் ஆலயமும் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றன. விநாயகர் சன்னதியின் முதல் பகுதியில் மூஷிக வாகனமும், பலிபீடமும் அமைந்துள்ளது.

முருகன் ஆலய கருவறை வெளிப்புறத்திற்கு சுவற்றில் தாமரை பீடத்தின் மேல் தட்சிணாமூர்த்தியின் சிலை தெற்கு முகம் பார்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு சுவற்றில் தாமரை பீடத்தின் மேல் அன்னை விஷ்ணு துர்கா தேவியின் சிலை வடக்கு முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மேல் செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட ஐந்து தலை நாக வடிவத்தில் குடை பிடிப்பது போன்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படுகின்றது. இம்மலைக் கோயிலில் 36 அடி உயர முருகனின் சிலை நிறுவப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.

Whats_app_banner