திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் வழிபாடு!
திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை தாமரை வடிவில் இருப்பதால் பத்மம் என்று அழைக்கப்படுகிறது. கிரி என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாகும் எனவே பத்மகிரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார்.
இக்கோயில் 14 ஆம் நூற்றாண்டில் சேர மன்னன் தர்ம பாலரால் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமலை நாயக்கர் விஜயநகர மன்னர்கள், பாண்டிய மன்னர்கள் மற்றும் ராணி மங்கம்மாள் ஆகியோர் கோயில் திருப்பணிகளைச் செய்து சீரமைத்தனர்.
சிறப்பு அம்சங்கள்
வேறு கோயில்களில் காண முடியாத அம்சமாக இக்கோயிலில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மன் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் உடனுடை ஞானாம்பிகை சன்னதிகள் உள்ளன. பத்மகிரீஸ்வரர் கோயிலின் தலவிருட்சமாக நெல்லி மரம் விளங்குகிறது.
கடும் வறட்சி நிரம்பி வந்த நிலையில் அம்மனின் அருளால் கோயில் கொடி மரத்தின் அருகில் உள்ள தீர்த்த கிணற்றில் உள்ள நீரைப் பயன்படுத்தி இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் தேரோட்டம் விமர்சையாக நடைபெறும். மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிவன் படி அளக்கும் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்.
தமிழகத்தில் வேறு எந்த தளங்களிலும் நடைபெறாத 63 நாயன்மார்களுக்கு உற்சவ விழா இங்குதான் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையில் 63 நாயன்மார்கள் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
இத்தலத்தில் வழிபடுகிறவர்களுக்கு முருகன் அருள் எளிதில் கட்டும் என்றும், பிரம்மா அகத்தியர் முனிவருக்குக் கூறியிருக்கிறார். இக்கோயிலில் வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும் திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் அகற்ற முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.