காட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் தல வரலாறு
நரசிம்மப் பெருமாளும், நாக வடிவிலான முருகப்பெருமானும் ஒரே கல்லில் சுயம்புவாக தரிசனம் அளிக்கும் காட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் குறித்து இங்கே காண்போம்.
பெங்களூரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுயம்புவாக காட்சியளிக்கும் காட்டி சுப்பிரமணியா. வரலாற்று ரீதியாக 600 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்கிறார்கள் என்றாலும் அதற்கு முன்பே வழிபாடுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
ஆச்சரியமாக ஏழு தலை பாம்புடன் முருகப்பெருமானையும் ஸ்ரீநரசிம்மரை மூலஸ்தானத்திலே கொண்டு அமைந்திருக்கிறது இந்த தலம். ஆலயத்தின் தீர்த்தமான ஸ்கந்த புஷ்கரணி உள்ளது. இன்னொரு தீர்த்தத்தையும் இங்கே காண முடிகிறது.
பிரணவத்தின் பொருள் தெரியாமல் போனாலும் பிரம்மன் செயல்படுவதில் தவறு இழைக்க வில்லை. அவர் செயலில் குறிக்கிட்டதன் மூலம் நீ தவறு செய்திருக்கிறார் என்பது புரிகிறதா என்றார் முருகனிடம் சிவபெருமான்.
முருகனின் செயல் சரி என்றாலும், பிரம்மா அவமதிக்கப்பட்டார். தந்தை சொல்வதில் உள்ள நுட்பமான உண்மை அவருக்குப் புரிந்தது. அதற்குத் தாமே ஒரு தண்டனை விதித்துக் கொண்டார்.
அப்படி அவர் ஏற்றதுதான் நாகவடிவாம். அந்தப் பெருமானைத் தேடி வந்தன மகா நாகங்களான வாசுகி போன்ற நாகங்கள். கருடனால் எங்களுக்கு ஆபத்து தொடர்கிறது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நாக வடிவிலிருந்த முருகனிடம் புகழ் அடைந்தன.
உடனே முருகன் பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனைத் துதித்தார். என்ன காரணம்? கருடனைக் கூப்பிட்டுக் கண்டிக்காமல் விஷ்ணுவைத் துடித்தது ஏன்? பிரம்மனின் செயலில் குறிப்பிட்டது போன்று செய்யக்கூடாது என்பதால் கருடனை வாகனமாகக் கொண்ட பெருமானைத் துதித்தார்.
முருகனின் பிரார்த்தனையை உணர்ந்து லக்ஷ்மி நரசிம்மராகத் தோன்றினார் திருமால். கருடனால் நாகங்களுக்குத் தொல்லை ஏற்படாது என்றும் வரமளித்தார். அது மட்டுமல்ல தாமே அங்கு எழுந்தருள்வதாக வாக்களித்தார்.
அதனால்தான் மூலஸ்தானத்தில் சுயம்புவாக கிழக்கு நோக்கி முருகன் தரிசனம் அளிக்கிறார் என்றால், அதன் மறுபக்கம் நரசிம்மர் தரிசனம் அளிக்கிறார். மூலவருக்கும் பின்னே பெரிதாக வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் நரசிம்மரின் திருவுருவத்தைத் தரிசிக்கிறார்கள் பக்தர்கள்.
அபூர்வமான இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது செவ்வாய்க் கிழமைகளிலும், செவ்வாய்க் கிரகம் குறித்த தோஷ நிவர்த்திக்கும் முருகப் பெருமானையும் ஸ்ரீ நரசிம்மரை வழிபடுவது விசேஷ பலன் அளிக்கும்.
கடன், நோய், அறுவை சிகிச்சை உள்ளிட்ட விஷயங்கள் செவ்வாயின் சார்பானவை. செவ்வாய்க்கு அதிதேவதை எனப்படும் முருகன், நாக வடிவில் இங்கு தரிசனம் அளிப்பது ராகுவின் அம்சமாகிறது. செவ்வாயின் பலன்களை ராகு அளிப்பார் என்கிறது ஜோதிடம். அதனால் தான் செவ்வாய் மற்றும் ராகு தொடர்பான தோஷங்களுக்கு இங்குப் பரிகாரம், பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.
தங்களுக்குக் குழந்தை பாக்கியம் அமைய வேண்டும், ராகு தோஷம் நீங்க வேண்டும் என்றெல்லாம் பிராத்திக்கிறார்கள். அந்த பிரார்த்தனை பலன் அளித்தவுடன் நாகர் சிலைகளை இங்கே கொண்டுவந்து வைக்கிறார்கள். அப்படி பக்தர்கள் சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளை இங்கே காண முடியும்.
நினைத்த மாத்திரத்தில் தோன்றி அருள் பாலித்த நரசிம்மப் பெருமாளும், நாக வடிவிலான முருகப்பெருமானும் ஒரே இடத்தில், ஒரே கல்லில் சுயம்புவாக முன்னும் பின்னுமாகத் தரிசனம் அளிப்பது இங்கு மட்டும்தான்.
செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து வழிபடுவது விசேஷமான பலன் அளிக்கும். பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் காட்டில் சுப்பிரமணியாவில் அருள்பாலிக்கும் இந்த முருகப்பெருமானைத் தரிசித்து நமது துயரங்களுக்குத் தீர்வளிக்கும் என்பது ஐதீகம்.