ஐந்தாம் படை வீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில்
ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி வழியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் அரக்கோணத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
அசுரர்களையும் அவர்களது தலைவரான சூரபத்மனையும் அளித்த முருகப்பெருமான், சினம் தணிந்து வீற்றிருப்பதால் இத்தலத்திற்குத் தணிகை எனப் பெயர் ஏற்பட்டு நாளடைவில் திருத்தணிகை திருத்தலம் எனப் பக்தர்களால் போற்றப்படுகிறது.
இத்தலம் முருகன் உறையும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடு என்பது, நக்கீரர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார், முத்துசாமி தீட்சிதர், ஆகிய அருளாளர்களால் பாடல் பெற்ற புனிதத் தலம் என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
திருத்தணிக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் சரவணப் பொய்கையில் நீராடி மலை உச்சிக்குச் சென்று கிழக்கு பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்ப விநாயகரையும், யானையையும் தரிசித்திடுவார்.
பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீல சுனையைத் தரிசித்து விட்டு கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், வீரபாக முதலிய நவவீரர்கள் மற்றும் குமார லிங்கேஸ்வரரை வணங்கி இறுதியில் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்தி எனும் முருகனையும் வள்ளி தெய்வானை அமைச்சரையும் வழிபடுவர்.
குறிப்பாக ஆடிக் கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் சகல நன்மைகளையும் பெறுகிறார்கள் என்பது ஐதீகம். இக்கோயிலில் வள்ளி திருமணம், தெய்வானை திருமணம், கந்த சஷ்டி விழா, சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இது தவிர ஆடி கிருத்திகை, கிருத்திகை மற்றும் வாசிக்கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் பக்தர்கள் பூக்காவடி, பால் காவடி ஆகியவற்றை ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தமிழர் கடவுளாக விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இக்கோயிலில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.