Amavasya Tithi: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் - கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
தர்ப்பணம் கொடுக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள் குறித்து இங்கே காண்போம்.
இறந்து போன முன்னோர்களுக்காக அமாவாசை தினத்தன்று திதி கொடுப்பது மிகவும் சிறப்பாகும். இந்த பூஜையானது பித்ரு தோஷத்தை நீக்கும் என ஆன்மீகம் கூறுகிறது. அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜையால் அவர்களுக்குக் குடிநீர் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஆதிகாலத்திலிருந்தே முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாத மாதம் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பாகும். இந்த இரண்டு மாதங்களும் அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதங்களில் பித்ருக்களுக்கு செய்யப்படும் பூஜை மூலம் முன்னோர்கள் அருளும், அம்மனின் அருளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொழுது சில முக்கியமான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அந்த விதிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
தர்ப்பண விதிகள்
- முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் பொழுது அந்த நீரை யார் காலிலும் படாத படி கொட்ட வேண்டும்.
- முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும்பொழுது, தாம்பூலத்தில் கூர்ச்சம் வைத்து பித்தர்களுக்கு ஆவாகனம் செய்யப்படும். அதற்குப் பிறகு அந்த தாம்பூலத்தை வேறு இடத்திற்கு நகர்த்தக் கூடாது.
- குழந்தை பிறப்பு, இறந்த தீட்டு உள்ள தீட்டுகள் இருந்தால் அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
- முன்னோர்களுக்காகச் சமைக்கப்படும் சமையலில் மிளகாய் சேர்க்கக்கூடாது அதற்குப் பதிலாக மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.
- முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்பவர்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ செய்யக்கூடாது.
- தர்ப்பணம் கொடுக்கும் போது எள்ளை மடியில் வைத்துக்கொண்டு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
- சீரார்த்தம் மற்றும் தர்ப்பணம் நடைபெறும் நாட்களில் மற்றும் அந்த நாள் முடியும் வரை பால் மற்றும் காபி உள்ளிட்டவை எதையும் சாப்பிடக்கூடாது.
- தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் பொழுது கரை இல்லாத வேஷ்டிகளைக் கட்டக் கூடாது. மற்றவர்களுக்கு தானம் கொடுத்தாலும் அப்படிப்பட்ட வேஷ்டிகளைக் கொடுக்கக் கூடாது.
- தரையில் இருந்து கொண்டு நீரில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. நீரில் இருந்து கொண்டு தரையில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்