Today Rasi Palan: அன்பாக பேசுங்கள் மக்களே!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: அன்பாக பேசுங்கள் மக்களே!

Today Rasi Palan: அன்பாக பேசுங்கள் மக்களே!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 09, 2023 05:30 AM IST

மார்ச் 9ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

 குடும்பத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மூத்த அவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. சில காரியங்கள் முடிய நேரம் எடுத்துக்கொள்ளும், வியாபாரம் லாபமும், நஷ்டமும் இல்லாமல் சமமான நிலையில் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசுங்கள், இல்லையேல் பிரச்சனையில் முடியும்.

ரிஷப ராசி

பணவரவு அதிகரிக்கும், செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும், குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கும், வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும்.

மிதுன ராசி

எடுத்த காரியத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் தடையில்லாமல் முடிந்துவிடும். கணவன்-மனைவிக்கிடையே இணக்கம் ஏற்படும், பிடிவாதத்தை தவிர்த்து விட்டு, பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும், நண்பர்களிடமிருந்து பணவரவு உண்டாகும்.

கடக ராசி

நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும், திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையாக இருங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், வியாபாரத்தில் லாபம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

சிம்ம ராசி

பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் கிடைக்கும். தேவையில்லாத செலவுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி ராசி

பணவரவு தாமதமாகும், புதிதாகத் தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. பேச்சுத் திறமையால் வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் நினைத்தவை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

வார்த்தைகளில் கவனம் தேவை, இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவறான சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தடைகளைக் கண்டு பயம் வேண்டாம். கடுமையான உழைப்பு வெற்றியைத் தரும்.

விருச்சிக ராசி

சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

தனுசு ராசி

உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் உதவி முன்னேற்றத்தைத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மகர ராசி

எதிர்பாராத நேரத்தில் உதவிகள் உங்களை தேடி வரும். பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு குறையும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

கும்ப ராசி

உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலிருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் சீராக செல்லும். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீன ராசி

தலைக்கனத்தை விடுவது நல்லது. பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கையெழுத்துப் போடும் போது கவனம் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை.

Whats_app_banner

டாபிக்ஸ்