Today Rasi Palan : ஏப்ரல் 3 - பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு இருக்கு!
ஏப்ரல் 3ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
நெருங்கிய பழக்கமாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து வந்த சொத்து சிக்கல்கள் தீரும். வீட்டில் திருமண காரியங்கள் நிகழ உள்ளது. வேலை விஷயத்தை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தடைகள் இன்றி வேலையை முடித்து விடுவீர்கள்.
ரிஷப ராசி
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத வேலைகளை செய்யாதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை நகைச்சுவை கூட சிக்கல்களை ஏற்படுத்தும். கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் மனைவி துணையாக இருப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடக ராசி
மற்றவர்கள் பேச்சை நம்ப வேண்டாம். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். உங்களைத் தேடி நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்ம ராசி
கடன் சிக்கல்கள் தீரும். முக்கியமான முடிவுகளுக்குப் பெரியோர்களை ஆலோசிப்பது சிறந்தது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
முடங்கிக் கிடந்த கட்டட வேலைகள் தொடங்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்கள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் வியாபாரத்தில் எதிர்ப்புகள் அதிகமாகும். தொழிலிலிருந்த சிக்கல்கள் தீரும். பிடிவாத குணத்தைத் தவிர்த்துவிடுங்கள்.
துலாம் ராசி
மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் நுழைய வேண்டாம். தேவையில்லாத விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கையெழுத்துப் போடும் போது கவனம் தேவை.
விருச்சிக ராசி
வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தனுசு ராசி
வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையென்றால் விபத்துக்கள் நேர அதிக வாய்ப்புள்ளது. புதிதாகப் பழகும்போது மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கடுமையான உழைப்பின் மூலம் கடன் சிக்கல்கள் தீரும். நிதானமாக இருப்பது நல்லது.
மகர ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வாகனம் வீடு-மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். புதிதாக முதலீடு செய்வீர்கள். உங்கள் சேமிப்பு உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் உதவும்.
கும்ப ராசி
பயணம் செல்லும்போது பொருட்களின் மீது கவனம் தேவை. மற்றவர்களின் பேச்சை அப்படியே நம்பாதீர்கள். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் மீது அக்கறை தேவை.
மீன ராசி
உண்மையை மறைப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உதவிகள் கிடைக்கச் சற்று தாமதம் ஆகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நல்ல உறவுகளுக்கு இடையே சில சின்ன சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தராது.
டாபிக்ஸ்