Worship: இன்னைக்கு எந்த கோயிலுக்கு போகலாம்? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Worship: இன்னைக்கு எந்த கோயிலுக்கு போகலாம்? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Worship: இன்னைக்கு எந்த கோயிலுக்கு போகலாம்? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2023 08:16 AM IST

எந்த கிழமையில் எந்த கடவுளை விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கே காண்போம்.

கோயில் வழிபாடு
கோயில் வழிபாடு

திங்கட்கிழமை

ஆன்மீகத்தின் படி சோமவாரம் என அழைக்கப்படும் இந்த திங்கட்கிழமை என்று சிவபெருமானை வழிபட்டால் அதீத நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகக் கூறப்படும் இந்த திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் சிவபெருமானுக்குப் பிரதோஷ விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நாளில் பால் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களைப் படைத்தால் மேலும் சிறப்பாகும்.

செவ்வாய்க்கிழமை

துர்க்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாக இந்த செவ்வாய்க்கிழமை போற்றப்படுகிறது. இந்நாளில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து ராகு காலம் நேரத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும்.

புதன்கிழமை

எங்குப் பார்த்தாலும் இவர் தான் என்பது போல முழுமுதற் கடவுளாக விளங்கும், விநாயகப் பெருமானுக்குப் புதன்கிழமை மிகவும் விசேஷ நாளாகும். இந்த நாளில் விநாயகர் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் எடுத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை

விஷ்ணு பகவான் முதல் தக்ஷிணாமூர்த்தி மற்றும் லட்சுமிதேவி வரை அனைவருக்கும் இந்நாள் மிகவும் விசேஷமான நாளாகும். இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் செல்வங்கள் பெருகும் எனக் கூறப்படுகிறது ஏனென்றால் இந்த நாள் குபேரனுக்கு மிகவும் விசேஷ நாளாகும்.

வெள்ளிக்கிழமை

அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாக இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது. செல்வத்தை அள்ளித் தரும் திருமகளை வணங்கவும் இந்நாள் மிகவும் சிறப்பான நாளாகும். அம்மனுக்கு விரதம் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்தால் குடும்பத்தைத் தேடி வரும் சிக்கல்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை

பிரதி பலன்களுக்கு ஏற்றவாறு பழங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய சனி பகவானுக்கு இந்நாள் விசேஷ நாளாகும். இவர் மட்டுமல்லாமல் இந்த நாளில் ஆஞ்சநேயர், பெருமாள் மற்றும் காளிதேவிக்கும் சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். சிவன் கோயிலுக்குச் சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் நம்மைச் சுற்றி இருக்கும் தோஷம் அனைத்தும் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை

நவகிரகங்களில் முதன்மையாகக் கருதப்படக் கூடியவர் சூரிய பகவான். இந்நாளில் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Whats_app_banner

டாபிக்ஸ்