Mercury Transit: புதன் பெயர்ச்சி..கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
புதன் பகவானால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் பிரபலமான கிரகமாக விளங்குவது புதன் பகவான். கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் புதன் பகவான் சிம்ம ராசியில் பிரவேசம் செய்து வருகிறார். இதனால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்கப் போகின்றது.
இந்த பலன்களானது வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு சிக்கலான மாற்றங்கள் ஏற்பட உள்ளதால் அவர்கள் பல்வேறு விதமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.
பொதுவாக புதன் பகவான் வலுவாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை அள்ளிக் கொடுப்பார். வலுவிழந்து அசுப பலன்களை கொடுக்க ஆரம்பித்தால் சிக்கல்கள் நிச்சயம் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது.
சிம்ம ராசியில் இருக்கக்கூடிய புதன் பகவான் சில ராசிகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்திருப்பதால் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் முக்கியமான வேலைகள் தாமதமாக நடக்கும். கவனத்தோடு இருப்பது நல்லது.
கடக ராசி
உங்கள் அரசியல் புதன் பகவான் இரண்டாவது வீட்டில் பெயர்ச்சி அடைந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடினமான உழைப்பு கூட வெற்றி பெறாத சூழ்நிலை உண்டாகும். உங்கள் பணத்தை குடும்பத்தினர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அனைத்து விஷயங்களிலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகர ராசி
புதன் பகவான் மிகவும் மோசமான பலன்களை உங்களுக்கு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சனி பகவானோடு இவர் உறவில் உள்ளார். இந்த பயணம் உங்களுக்கு சாதகமற்ற மாற்றங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. சாலையில் நடந்து செல்லும் போதும் கூட கவனமாக இருப்பது மிகவும் நல்லது. கடின உழைப்பு எதிர்காலத்தில் பலன்களை தரும் பொறுமையாக இருப்பது நல்லது.
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. தேவை என்றால் சரியான நிபுணரை அனுப்பி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்