Mars Attack: 2024 தொடக்கத்திலேயே மிரட்டல் அடி வாங்கும் ராசிகள்
செவ்வாய் பகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார் இவர் தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசியின் உள்ளே சென்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றத்தால் சில ராசிகள் சங்கடங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சில சங்கடமான சூழ்நிலைகளை கொடுக்க போகின்றார். திடீரென செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். மற்றவர்களிடத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசமான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
மகர ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கொடுக்க தயாராக இல்லை. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணத்தை தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9