குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற ராசிகள்!

குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 11, 2022 02:56 AM IST

குருபகவானால் இந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கப்போகும் மூன்று ராசிகள் குறித்துக் காண்போம்.

<p>குருபகவானின் அன்பான ராசிகள்&nbsp;</p>
<p>குருபகவானின் அன்பான ராசிகள்&nbsp;</p>

குருபகவான் எந்த கட்டத்தில் அமர்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் அந்தந்த ராசிகளுக்குப் பலன்கள் கிடைக்கும்.  குருபகவானின் பார்வை பட்டால் அவர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. இந்தமுறை கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய மூன்று ராசிகளின் மீது குரு பகவானின் பார்வை விழுகிறது.

குறிப்பாகக் கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை நல்ல பலன்களை அள்ளிக் கொடுப்பதில் குருபகவான் வல்லவர். தற்போது பெயர்ச்சி அடைந்து உள்ள குரு பகவான் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெயர்ச்சி அடைவார் என்று ஜோதிடம் கூறுகிறது. இதனால் யோகம் பெறப்போகும் மூன்று ராசிகள் குறிக்கும் இங்கே காண்போம்.

ரிஷப ராசி

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தரப் போகிறது. வருமானம் அதிகரித்து தொழில் முன்னேற்றம் அடையும். ஆசைகள் நிறைவேறும், கடன் தொல்லைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மற்றவர்களிடம் மரியாதை கூடும்.

மிதுன ராசி

தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இந்த ஆண்டு உங்களுக்குச் சுபிட்சமாக இருக்கும்.

கடக ராசி

குருபகவானால் முழுமையான யோகத்தைப் பெறப்போகிற ராசியில் நீங்களும் ஒருவர். தொழில் சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். அதேபோல் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். எதிரிகள் உங்களை நோக்கி வரவே தயங்குவார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையாக அமையும்.

Whats_app_banner