தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Benefits For May 24th

மே 24ஆம் தேதி ராசிபலன்: வியாபாரத்தில் முன்னேற்றம்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2022 05:00 AM IST

மே 24ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கல்வியில் வளர்ச்சி அதிகரிக்கும். சிக்கலான விஷயங்களை நம்பிக்கையோடு எதிர்கொள்வீர்கள். லாபத்தில் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் உண்டாகும்.

ரிஷப ராசி

சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். புதிய தொழிலைத் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல அதிக வாய்ப்புள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த சிக்கல்கள் தீரும்.

மிதுன ராசி

நீங்கள் செய்த நல்ல காரியங்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடின உழைப்பால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ வழிபாடு அவசியமாகும்.

கடக ராசி

புதிதாக யாரிடமாவது பழகினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லை எனில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடுமையான உழைப்பிற்குப் பிறகு கடன் சிக்கல்கள் தீரும். நிதானமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

புதிய வீடு, வாகனங்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். மற்றவர்கள் பேச்சைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முதலீடு வரும் காலங்களில் உங்களைக் காப்பாற்றும்.

கன்னி ராசி

மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். தொலைதூர பயணம் செய்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

துலாம் ராசி

தொழிலில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்காது. ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படும். கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தராது. உண்மையை மறைத்துப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிக ராசி

உங்கள் புதிய முயற்சி நல்ல பலனைத் தரும். கடினமான உழைப்பால் தொழிலை முன்னேற்றுவீர்கள். தேவையான நேரத்தில் நண்பர்களால் உதவி கிடைக்கும். உடல் நலத்தைப் பற்றி தற்போது கவலை வேண்டாம். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

நண்பர்களுக்காக சில சிக்கல்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வேலையைக் கவனித்தால் மிகவும் நல்லது. மற்றவர்களின் பேச்சைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

மகர ராசி

உங்கள் வாய் திறமையால் நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

கும்ப ராசி

உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றக் கடினமாக உழைப்பீர்கள். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். வீட்டில் சாப்பிடுவது நல்லது. உடல்நலக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடன்களை அடைக்கச் சிரமமாக இருக்கும். பணவரவு நிதானமாக இருக்கும்.

மீன ராசி

ஞாபக சக்தியை அதிகப் படுத்துவது நல்லது. நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் நிதானமாகச் செல்லும். சிறு வியாபாரிகளுக்குச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடு கட்டும் பணியில் சற்று தாமதமாகும். மன உளைச்சல் அதிகமாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்