Karthigai Deepam 2022: சிக்கல்களைப் போக்கும் கார்த்திகை தீபத் திருவிழா!
கார்த்திகை மாதத்தில் உள்ள சிறப்புத் திருநாள்கள் குறித்து இங்கே காண்போம்.
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்த மகா தீபத் திருவிழாவைக் காண்பவர்களின் வாழ்வில் நன்மைகள் அதிகமாகும் என்பது ஐதீகமாகும். ராட்சசர்களைக் கொளுத்துவதை மையமாகக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் கடவுளின் மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் குறித்து இங்கே காண்போம்.
கார்த்திகை சோமவாரம்
கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம் கடைப் பிடித்தால் நம் வாழ்வில் செய்யும் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
பௌர்ணமி திதி
கார்த்திகை மாத பௌர்ணமி திதி அன்று நாயுருவி வேரினை எடுத்து வீட்டுக்குள் வைத்தால் தன லாபம் பெருகும் எனக் கூறப்படுகிறது.
கார்த்திகை மாத தானம்
கார்த்திகை மாதத்தில் தீபம், வெண்கல பாத்திரம், பழம், தானியம், அன்னம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். கார்த்திகை மாதம் புராணம் குறித்து மற்றவர்களுக்கு உரைத்தால் வாழ்க்கையில் ஏழ்மை அகலும் எனக் கூறப்படுகிறது. இம்மாதத்தில் செய்யப்படும் தானங்களின் பலன்கள் இரு மடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும்.
அதேபோல் இம்மாதத்தில் நெல்லிக்கனி உள்ளிட்ட பழங்களை மற்றவர்களுக்கு தானம் கொடுத்தால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.
சுத்தம்
கார்த்திகை மாதத்தில் பூஜை அறை மற்றும் கோயில்களைச் சுத்தமாக வைத்திருந்தாள் அளவிட முடியாத பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மன அமைதியை அதிகப்படுத்த பகவத்கீதை படிக்க வேண்டும்.
தீபம்
திருக்கார்த்திகை திருநாளன்று தீபத்தைக் கிழக்கு நோக்கி ஏற்றி வைத்தால் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். அதேபோல் மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் சிக்கல்கள் விலகும் என்பது ஐதீகம் ஆகும்.
சிறப்புச் சோமவாரம்
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் சோமவாரம் மற்றும் கிருத்திகைக்குப் பிறகு வரும் சோமவாரம் மிகவும் சிறப்பாகும். அந்த திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.