Mundagakanni Amman: பில்லி சூனியம் நீக்கும் முண்டகக்கன்னி அம்மன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mundagakanni Amman: பில்லி சூனியம் நீக்கும் முண்டகக்கன்னி அம்மன்

Mundagakanni Amman: பில்லி சூனியம் நீக்கும் முண்டகக்கன்னி அம்மன்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 24, 2023 10:00 PM IST

மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன் திருக்கோயிலின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

முண்டகக்கன்னி அம்மன்
முண்டகக்கன்னி அம்மன்

முண்டகக்கன்னி அம்மனின் சிறப்புகள்

யாருக்கேனும் அம்மை நோய் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் இந்த கோயிலுக்கு வந்து பூசாரி கொடுக்கும் அம்மனின் தீர்த்தம், வேப்பிலை, மஞ்சள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கொடுக்க வேண்டும்.

தீர்த்தத்தைக் கொடுத்த பிறகு அவர்களது தலையில் சிறிது தீர்த்தத்தைத் தெளிக்க வேண்டும். பின்னர் அம்மை போட்டுள்ள இடங்களில் மஞ்சளைத் தேய்த்து விட வேண்டும்.

இப்படிச் செய்தால் உடனே அம்மை நோய் இறங்கி விடுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

பில்லி மற்றும் சூனியத்தால் பல குடும்பங்களில் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தொழில் கஷ்டம், மனக்கவலை, குடும்பத்தில் அமைதியின்மை என அனைத்து விதமான சிக்கல்களுக்கும் பில்லி சூனியம் காரணமாக இங்கிருந்தால் இந்த கோயிலுக்கு வந்தால் போதும்.

இது போன்ற சிக்கல்களுக்கு நிரந்தர முடிவு கட்ட முண்டகக்கன்னி அம்மன் கோயிலுக்கு வரலாம். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்துவிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதனைப் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.

பின்னர் உங்கள் சிக்கல் குறித்து மனம் வரைக்கும் வேண்டிக் கொண்டால் உங்களுக்குப் பிடித்த பில்லி சூனியம் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களும் விலகும் எனக் கூறப்படுகிறது.

குழந்தை பாக்கியம்

 

முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய நாகர் சிலைகளுக்கு அதீத பலம் உண்டு எனக் கூறப்படுகிறது. இந்த தளத்தில் இடது பக்கத்தில் இரண்டு அரச மரத்தடியில் ஏராளமான நாகர்கள் சிலைகள் உள்ளன.

வேண்டுதல் செய்து பக்தர்கள் பலர் இந்த சிலைகளை அங்கு வைத்துள்ளனர். இந்த சிலைகளுக்குப் பக்தர்களே நேரடியாகப் பாலாபிஷேகம் செய்யலாம். குழந்தை இல்லாதவர்கள் நாகர்கள் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்