Lord Guru: குரு தாறுமாறாக அடி கொடுப்பார்.. கத்திக் கொண்டு கதறும் ராசிகள்.. சிக்கியது யார்? பார்க்கலாம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு தாறுமாறாக அடி கொடுப்பார்.. கத்திக் கொண்டு கதறும் ராசிகள்.. சிக்கியது யார்? பார்க்கலாம் வாங்க!

Lord Guru: குரு தாறுமாறாக அடி கொடுப்பார்.. கத்திக் கொண்டு கதறும் ராசிகள்.. சிக்கியது யார்? பார்க்கலாம் வாங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 11:54 AM IST

Lord Guru: குரு பகவானின் உதயத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

குரு தாறுமாறாக அடி கொடுப்பார்.. கத்திக் கொண்டு கதறும் ராசிகள்.. சிக்கியது யார்? பார்க்கலாம் வாங்க!
குரு தாறுமாறாக அடி கொடுப்பார்.. கத்திக் கொண்டு கதறும் ராசிகள்.. சிக்கியது யார்? பார்க்கலாம் வாங்க!

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களிலேயே அஸ்தமனம் ஆகிவிட்டார் அஸ்தமன நேரத்தில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இந்நிலையில் குரு பகவான் ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று உதயமான குரு பகவானின் உதயத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் முதல் வீட்டில் உதயம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணை மூலம் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் 12-வது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் உங்களது உடலை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. 

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் உங்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்காது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகியுள்ளார். இதனால் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தொண்டை மற்றும் கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது ஒரு கண் இருப்பது நல்லது. பங்குச்சந்தை முதலீடுகள் பெரிய அளவில் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner