மே 16ஆம் தேதி ராசிபலன்: கடினமாக உழைக்க வேண்டும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மே 16ஆம் தேதி ராசிபலன்: கடினமாக உழைக்க வேண்டும்!

மே 16ஆம் தேதி ராசிபலன்: கடினமாக உழைக்க வேண்டும்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 16, 2022 05:00 AM IST

மே 16ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

<p>இன்றைய ராசிபலன்&nbsp;</p>
<p>இன்றைய ராசிபலன்&nbsp;</p>

கடன் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்பிக்கையான சிலபேர் ஏமாற்றுவார்கள். கூடுமான வரையில் வெளியூர் பயணங்களை தவிர்த்துவிடுங்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி

சொத்துக்களிலிருந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

மிதுன ராசி

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு தாமதமாகும். பிள்ளைகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் சிக்கல்கள் ஏற்படும். பயணங்களால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அலட்சியம் வேண்டாம். கவனமாக இருப்பது நல்லது.

கடக ராசி

பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் கிடைக்கும். தேவையில்லாத செலவுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

பணவரவு தாமதமாகும், புதிதாகத் தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. பேச்சுத் திறமையால் வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் நினைத்தவை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

வார்த்தைகளில் கவனம் தேவை, இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவறான சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தடைகளைக் கண்டு பயம் வேண்டாம். கடுமையான உழைப்பு வெற்றியைத் தரும்.

துலாம் ராசி

சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

கடன் சிக்கல்கள் தீரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மந்தமாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் உதவிகள் தாமதமாகும். பணவரவு மந்தமாக இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் உள்ளது. வியாபாரத்தைப் பொறுத்தவரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவமனையில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தள்ளிப்போகும். சிறு வியாபாரிகளுக்கு மந்தமான நிலை ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படும். பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மன உளைச்சல் அதிகரிக்கும்.

மகர ராசி

உங்கள் சேமிப்பு உங்களைக் காப்பாற்றும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நண்பர்கள் மூலம் தீர்ப்பீர்கள். எதிர்பாராத நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.

கும்ப ராசி

ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசாங்க உதவிகள் உங்களைத் தேடிவரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய வியாபாரம் விரிவடையும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும்.

மீன ராசி

உங்களை விட்டுச் சென்ற அனைத்தும் தேடி வரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும், எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவி கிடைக்கும். கல்வி விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல பலனைத் தரும்.

Whats_app_banner

டாபிக்ஸ்