பாபா வங்கா.. 2025-ல் பேரழிவுகள் கணிப்பு.. புரட்டி போடப்போகும் சம்பவங்கள்.. இது எல்லாம் நடக்குமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பாபா வங்கா.. 2025-ல் பேரழிவுகள் கணிப்பு.. புரட்டி போடப்போகும் சம்பவங்கள்.. இது எல்லாம் நடக்குமா?

பாபா வங்கா.. 2025-ல் பேரழிவுகள் கணிப்பு.. புரட்டி போடப்போகும் சம்பவங்கள்.. இது எல்லாம் நடக்குமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 17, 2024 01:36 PM IST

Baba Vanga: 2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டு பல ஆபத்துக்கள் நடக்கப் போவதாக அவருடைய கணிப்புகள் கூறுகின்றன. அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

பாபா வங்கா.. 2025-ல் பேரழிவுகள் கணிப்பு.. புரட்டி போடப்போகும் சம்பவங்கள்.. இது எல்லாம் நடக்குமா?
பாபா வங்கா.. 2025-ல் பேரழிவுகள் கணிப்பு.. புரட்டி போடப்போகும் சம்பவங்கள்.. இது எல்லாம் நடக்குமா?

பாபா வங்கா பல சர்ச்சையான மற்றும் பல சீர்கேடுகள் குறித்து தீர்க்கதரிசனங்களை கணித்து கூறியுள்ளார். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டு பல ஆபத்துக்கள் நடக்கப் போவதாக அவருடைய கணிப்புகள் கூறுகின்றன. அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

பாபா வங்கா

பாபா வங்கா கண்களால் பார்க்க முடியாதவர். அவர் 1911 இல் பல்கேரியாவில் பாண்டேவா டிமிட்ரோவா பிறந்தார். 12 வயதில், ஒரு பெரிய புயலில் மர்மமான முறையில் தனது கண்பார்வையை இழந்தார். திருமணமாகி நீண்ட நாட்கள் காணாமல் போனார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பல தேடல்களுக்குப் பிறகு அவரைக் கண்டுபிடித்தபோது, அவர் முதலில் தனது எதிர்காலம் குறித்த கணிப்பைக் கூறினார். இவர் 1996 இல் இறந்தார். அவர் சொன்னது வெவ்வேறு சமயங்களில் உண்மையாயிற்று. அது டயானாவின் மரணமாக இருந்தாலும் சரி, கொரோனாவைரஸ் தொற்றுநோயாக இருந்தாலும் சரி. இவை அனைத்தையும் அவர் முன்னரே கணித்து கூறியாக கூறப்படுகிறது.

இணையத்தில் போர்

தற்போது உலகம் முழுவதும் டிஜிட்டல் மையத்தில் வாழ்ந்து வருகின்றனர். தகவல் தொடர்பு அமைப்புகள் மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இணையத்தின் மூலம் பல தாக்குதல்கள் உலகளாவிய முறையில் ஏற்படலாம் என பாபா வங்கா கணித்துள்ளார். இணையத்தின் மிகப்பெரிய போர் ஏற்பட்ட உலகம் முழுவதும் பலவிதமான சூழ்நிலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏலியன்

பூமியைச் சேர்ந்த உயிரினங்கள் அல்லாமல் இருக்கக்கூடிய உயிரினங்கள் இந்த 2025 ஆம் ஆண்டு பூமிக்கு வரலாம் என பாபா வங்கா கணித்துள்ளார். ஏலியன்கள் பூமிக்கு வந்து தாங்கள் இருப்பதை நமது உலகத்தில் உணர்த்தக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ முன்னேற்றம்

2025 ஆம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்பில் இது ஒன்றுதான் நேர்மறையாக அமைந்துள்ளது. மருத்துவத்துறையில் இந்த 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும் மற்றும் முழுமையாக வளர்ச்சி பெற்ற மனித உறுப்புகள் உருவாக்கக்கூடிய முன்னேற்றம் ஏற்படக்கூடும் என பாபா வங்கா கணித்துள்ளார். உறுப்பு மாற்றம் செய்வது மிகவும் எளிமையாக விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அழிவு

இந்த 2025 ஆம் ஆண்டு காலநிலை மாற்றங்கள் மிகவும் பாதிக்கப்படும் என பாபா வாங்க கணித்துள்ளார். காலநிலைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதேபோல நமது பூமியின் சுற்றுப்பாதை ஆனது மாற்றத்தை அடையும். இதனால் மிகப்பெரிய பேரழிவுகள் நமது விளக்கத்திற்கு ஏற்படலாம் என பாபா வங்கா கணித்துள்ளார்.

நாடுகளுக்குள் மோதல்

ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் மோதல்கள் ஏற்படக்கூடும் என பாபா வங்கா கணித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல்கள் இன்னும் அதிகரிக்கும் இடம் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பேரொளிவின் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் இடம் தணிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த 2025 ஆம் ஆண்டு அணு ஆயுத மோதல்களும் நடக்க கூடும் என பாபா வங்கா கணிப்புகள் கூறுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner