விடாமல் விரட்டியடிக்கும் புதன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
- Transit of Mercury: புதன் அஸ்தமனத்தால் சிரமப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Transit of Mercury: புதன் அஸ்தமனத்தால் சிரமப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் அறிவு, சுய அறிவு, பகுத்தறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ராசி மாற்றம் மட்டுமல்லாது நவகிரகங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 6)
தற்போது சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார். அடுத்த ஒரு மாத காலத்திற்கு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். உங்களுக்கு காரியங்களில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கச் சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழில் முயற்சிகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு பணம் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும் .பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்