Saptha Matha and Saptha Kannimar: இவர்களுக்குள் வித்தியாசம் உள்ளதா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saptha Matha And Saptha Kannimar: இவர்களுக்குள் வித்தியாசம் உள்ளதா!

Saptha Matha and Saptha Kannimar: இவர்களுக்குள் வித்தியாசம் உள்ளதா!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 21, 2022 04:33 PM IST

சப்த மாதர்களுக்கும், சப்த கன்னிமார்களுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சப்த மாதர்களுக்கும், சப்த கன்னிமார்களுக்கும் வித்தியாசம்
சப்த மாதர்களுக்கும், சப்த கன்னிமார்களுக்கும் வித்தியாசம்

சிறு கற்கள் கன்னிமார் என்றும், பெரிய கல் கருப்பராயன் என்றும் வழிபடப்பட்டு வருகின்றன. கன்னிமாருக்கு பொங்கல் வைத்தும் கருகமணி, கருவளையம் வைத்து வழிபடுதல் தொன்மை வழிபாடாகும். கன்னிமார் வழிபாட்டிற்கு தனி மந்திரங்களோ, வழிபாட்டு சடங்குகளோ இல்லை. தாந்த்ரீக வழிபாட்டு முறையை சேர்ந்த கன்னி வழிபாடு வேறு கன்னிமார் வழிபாடு வேறு.

வயல்வெளிகளிலும் வாய்க்கால், கிணறு ஆற்றல் கறைகளிலும் கன்னிமார் நாகர்களுடன் இருப்பதுண்டு. சிவபெருமானை பிரிந்து மண்ணுலகில் பிறந்த பார்வதி தேவி இறைவனிடம் கூட கடும் தவம் புரிந்து பூசைகள் செய்கையில் தன் திருமேனியின் வியர்வையை வலித்து எறிந்தார்.

விட்டெறிந்த வியர்வை 7 பொட்டுக்களாக தெரித்தது. அதுவே ஏழு கன்னியர் என கன்னிமார் மண்ணுலகுக்கு வந்த வரலாறு கூறப்படுகிறது. கன்னியரை வழிபட்டால் ஒன்று பத்தாக விளையும். கன்னியரை வழிபடுபவரையும் அவர்களுடைய குடும்பத்தையும் தான் அடிமையாக இருந்து காப்பாற்றுவதாக உறுதி கூறுகிறார் அன்னை பார்வதி.

சப்த மாதர்கள்

சப்த மாதர் வழிபாடு வைதீக தொடர்புடையது அசுரர்களின் அரசன் அந்தகாசுரன் தன்னுடைய தவத்தின் பயனாக பிரம்மனிடம் பல வரங்களைப் பெற்றான், தேவர்களை துன்புறுத்தினார்.

பார்வதி தேவியின் மீது காதல் கொண்டு கடத்த முயன்றார். சிவனுக்கும் அசுரனுக்கும் போர் மூண்டது. அந்தகாசுரன் உடலில் இருந்து வழிந்த ஒவ்வொரு ரத்த துளி ஒவ்வொன்றில் இருந்தும் பல அசுரர்கள் தோன்றினர். சிவன் அசுரன் உடலில் இருந்து வரும் ரத்தம் கீழே நிலத்தில் விழாமல் தடுக்க சிவன் யோகேஸ்வரி எனும் சக்தியையும் பிரம்மன், மகேஸ்வரன், குமரன், விஷ்ணு, வராகர், இந்திரன், இமையன் போன்ற தேவர்கள்.

சாமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி என்னும் சக்திகளை பெண்களாக உருவாக்கி அசுரன் உடம்பில் இருந்து பெருகும் ரத்தத்தை நிலத்தில் விழாதவாறு தடுத்தனர் என சப்த மாதர்கள் வரலாறு கூறப்படுகிறது.

கன்னிமார்களுக்கு சப்த மாதர்களைப் போல தனித்தனி பெயரோ, குணமோ இல்லை. கன்னிமார் மணமாகாத இளம் கன்னியர்களே, இணையான ஆண் தெய்வம் இல்லை.

சப்தமாதர்களுக்கு உயிர் பலி உண்டு, கன்னிமாருக்கு சாத்வீக பூசையே செய்யப்படுகிறது. சப்தமாதர்கள் ஆண் தெய்வங்களின் சக்தி, முறைப்படுத்தப்பட்ட திருஉருவங்களும் வழிபாட்டு முறைகளும் உண்டு. வடமொழி புராணங்களாலும் பிறமொழி கலப்பாலும் தமிழகத்தில் பரவிய சக்தி வழிபாட்டு முறையே சப்த மாதர் வழிபாடு. கன்னிமார் வழிபாடு தொன்மையானது எனக் கூறப்படுகிறது.

Whats_app_banner