Capricorn : மகர ராசி பெண்களே உங்களுக்கு இந்த வாரம் இப்படி தான் இருக்க போகுது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Capricorn : மகர ராசி பெண்களே உங்களுக்கு இந்த வாரம் இப்படி தான் இருக்க போகுது!

Capricorn : மகர ராசி பெண்களே உங்களுக்கு இந்த வாரம் இப்படி தான் இருக்க போகுது!

Divya Sekar HT Tamil
Sep 15, 2023 10:45 AM IST

மகர ராசி நேயர்களே இந்த வாரம்(14-20) உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இதில் காண்போம்.

மகரம் ராசி
மகரம் ராசி

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். 

வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த காரியத்திலும் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும்

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. செலவுகளைச் சமாளிக்கத் தேவையான அளவுக்கு அதிகமாகவே பணம் கிடைப்பதால் சேமிக்கவும் முடியும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.

திங்களன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்