Diwali 2023:தீபாவளியின் தெய்வ வழிபாடு அவசியம்.. வழிபட வேண்டிய கோயில்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Diwali 2023:தீபாவளியின் தெய்வ வழிபாடு அவசியம்.. வழிபட வேண்டிய கோயில்கள்

Diwali 2023:தீபாவளியின் தெய்வ வழிபாடு அவசியம்.. வழிபட வேண்டிய கோயில்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 08, 2023 06:16 AM IST

தீபாவளி சிறப்பு திருநாளன்று செல்ல வேண்டிய கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

தீபாவளி வழிபாடு
தீபாவளி வழிபாடு

அதுமட்டுமல்லாது தீபாவளி என்றால் மிக முக்கியமான ஒன்று தெய்வ வழிபாடு. தெய்வ வழிபாட்டிற்கு தீபாவளி திருநாள் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. அப்படி தீபாவளி திருநாளில் நாம் சென்று வழிபட வேண்டிய சில சிறப்பு கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

திருச்சி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

 

தீபாவளி திருநாள் மிகவும் விசேஷமாக இந்த கோயிலில் கொண்டாடப்படுகிறது பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்களோடு பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிப்பார். தீபாவளி திருநாளன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

சித்தநதீஸ்வரர் திருக்கோயில்

 

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில். ரிஷி ஒருவர் மகாலட்சுமி எனக்கு மகளாக பிறக்க வேண்டும் என சிவபெருமானிடம் வரம் பெற்று மகாலட்சுமியை மகளாக இந்த திருத்தளத்தில் பெற்றார் என்பது புராணம். அதனால் தீபாவளி தினத்தன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில்

 

திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு நிதி பற்றாக்குறையால் அவதிப்படும் மக்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீபாவளி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் அனைத்து விதமான சிறந்த பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

தமிழ்நாடு மட்டுமல்லாது நம் நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீபாவளி தினத்தன்று சிறப்பு வழிபாடுகளும் மற்றும் பூஜைகளும் நடைபெறும். குறிப்பாக சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடைபெறுவது வழக்கமாகும். கொண்டாட்டத்தோடு தெய்வ வழிபாடும் செய்து பலன்களை பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்