Puja room: பூஜையறையில் தவிர்க்க வேண்டியவை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Puja Room: பூஜையறையில் தவிர்க்க வேண்டியவை!

Puja room: பூஜையறையில் தவிர்க்க வேண்டியவை!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 14, 2022 06:46 PM IST

பூஜை அறையில் நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கே காண்போம்.

பூஜையறை
பூஜையறை

பூஜை அறையில் தவிர்க்க வேண்டியவை

  • பூஜை அறையிலோ வீட்டிலோ தெய்வ படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர்கள் தெற்கு பகுதியில் வடக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
  • தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. கிழக்கு பக்கம் முடியாவிட்டால் தெற்கு பக்கத்தை தவிர பிற திசைகளை பார்த்து படங்களை வைத்து வணங்கலாம்.
  • நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
  • அன்னம் முதலியவற்றை எவர் சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
  • திங்கள்கிழமை என்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரையை கையால் தொடக்கூடாது. தனது வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு ஒருபோதும் செல்லக்கூடாது.
  • எரியும் விளக்கில் எண்ணை அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதை தன் தலையில் தடவிக் கொள்வதும் ஒரு பொழுதும் கூடாது.
  • சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டுவைக்கக் கூடாது. உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
  • வணங்கி வீடு திரும்பும் பொழுது லட்சுமி தேவியும் நம்முடன் நம்முடைய வீட்டுக்கு வருகின்றாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோயில்களிலிருந்து வீடு திரும்பும் அங்கே உட்காரக்கூடாது.
  • மேற்கண்ட தகவல்களை பூஜையறையில் நம்முடைய இல்லத்தில் முறையாக வழிபாடு செய்து வந்தால் நம்முடைய இல்லத்திற்கு லட்சுமி தேவி தேடி வருவாள் என்பது ஐதீகமாகும்.

Whats_app_banner