Guru Vagra Peyarchi 2024: வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!
Guru Vagra Peyarchi 2024: ஜோதிடத்தை பொறுத்தவரை ஜாதகத்தில் முழு சுப கிரகம் ஆன குரு பகவான் வக்ர நிலையை அடைவதால் அதிகபடியான நன்மைகளை தரும்.

வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார். இந்த 4 மாத காலத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
ஜோசியத்தை பொறுத்தவரைக்கும் ஜாதகத்தில் முழு சுப கிரகம் ஆன குரு பகவான் வக்ர நிலையை அடைவதால் அதிகபடியான நன்மைகளை தரும்.
மேஷம்
மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவங்களுக்கு வக்ர குரு காலம் பண மழை கொட்டும் காலமாக இருக்கும். தன ஸ்தானம் எனப்படும் 2ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் பெற உள்ளார். அபரிவிதமான பணத்திற்கு உரிய கிரகம் ஆக குரு பகவான் உள்ளார். வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகள் அதிகம் உண்டு. தனக்காரகன் ஆன குரு பகவான் உங்கள் ராசியில் உள்ளதால் எடுக்கும் முயற்சிகள் மூலம் தன வரவு அதிகரிக்கும். காலபுருஷனுக்கு இரண்டாம் வீடு ரிஷபம் தன ஸ்தானம் என்பதால் ரிஷபம் ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் சொத்துக்களை சேர்பீர்கள்.
கடகம்
கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் பண மழையில் நனைய அதிக வாய்ப்பு உள்ளது. லாபஸ்தானம் எனும் 11ஆம் இடத்தில் உள்ள குரு வக்ரம் பெறுகிறார். இதனால் பணம் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைகே செல்லாமல் பணவரவு இருக்கும். குடும்பம் மற்றும் உறவுகள் நிதிரீதியாக உதவுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் பாவத்தில் குரு பகவான் வக்ரம் அடைய உள்ளார். இதனால் தொழில் விருத்தி அடைந்து லாபம் கிடைக்கும். இதுவரை மெதுவாக சென்று கொண்டு இருந்த தொழில் சிறப்படைந்து ஆச்சரியம் தரும். செய்யும் செயல்கள் வெற்றி அடைந்து உங்களை உற்சாகப்படுத்தும்.
கன்னி
கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் வக்ரம் பெறுவதன் மூலம் நன்மைகளை செய்வார். முன் ஜென்மத்தில் செய்த நன்மைகளுக்கு ஏற்ற பலன்களை குருபகவான் ஏற்படுத்தி தருவார். பணவரவு அதிகப்படுத்தி உங்களை ஆனந்தப்படுத்தும்.
மகரம்
மகர ராசி மற்றும் மகர லக்னக்காரர்கள் பண மழையில் நனையம் வாய்ப்பு அதிகம் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்தில் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருக்கும் போது ஜாதகர் வெற்றிகளை குவிப்பார். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து ஆனந்தம், தரும்.
கும்பம்
கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பணமழையில் நனைய அதிக வாய்ப்புகள் உண்டு. சுப ஸ்தானத்தில் உள்ள கோச்சார குரு பகவான் வக்ரம் பெறுகிறார். சொந்த வீடு கட்டுவீர்கள். நிலம் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
