Guru Vagra Peyarchi: வக்ரம் பெறும் குரு! அடுத்த 150 நாட்களுக்கு அடித்து தூக்கப்போகும் 3 ராசிகள்! அடேங்கப்பா!-guru vagra peyarchi brings benefits to rishapam kanni and simmam rasis discover the effects - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vagra Peyarchi: வக்ரம் பெறும் குரு! அடுத்த 150 நாட்களுக்கு அடித்து தூக்கப்போகும் 3 ராசிகள்! அடேங்கப்பா!

Guru Vagra Peyarchi: வக்ரம் பெறும் குரு! அடுத்த 150 நாட்களுக்கு அடித்து தூக்கப்போகும் 3 ராசிகள்! அடேங்கப்பா!

Kathiravan V HT Tamil
Aug 21, 2024 04:46 PM IST

Guru Vagra Peyarchi: குரு பகவான் வரும் அக்டோபர் 9, அன்று மதியம் 12:33 மணிக்கு ரிஷப ராசியில் வக்ரம் பெற உள்ளார். இந்த நிலை ஆனது பிப்ரவரி 4, 2025 வரை நீடிக்கும்.

Guru Vagra Peyarchi: வக்ரம் பெறும் குரு! அடுத்த 150 நாட்களுக்கு அடித்து தூக்கப்போகும் 3 ராசிகள்! அடேங்கப்பா!
Guru Vagra Peyarchi: வக்ரம் பெறும் குரு! அடுத்த 150 நாட்களுக்கு அடித்து தூக்கப்போகும் 3 ராசிகள்! அடேங்கப்பா!

குரு பகவான் தரும் நன்மைகள் 

குரு பகவான் தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷபம் ராசியில் உள்ளார். நவகிரகங்களில் முதன்மை முழு சுப கிரகம் ஆன குரு பகவான் அனைத்து அறிவின் மூலமாகவும் கருதப்படுகிறார். 

அவர் மூலமாகவே நாம் உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுகிறோம். ஞானம் என்பது அறிவின் உச்ச நிலை. குரு பகவான் ஞானத்தின் உண்மையான அடையாளமாகக் கருதப்படுகிறார். குரு பகவானின் அருளால் வாழ்க்கை வளம் பெறும்.

குரு பெயர்ச்சியும், குரு வக்ர பெயர்ச்சியும்

தேவ குரு என அழைக்கப்படும் குரு பகவான் ஆனவர் கடந்த மே மாதத்தில் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து இருந்தார். அடுத்த ஆண்டு மே 13ஆம் தேதி வரை அந்த ராசியில் இருப்பார். இந்த நேரத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் வக்ரம் பெற்று பின்னோக்கி செல்ல உள்ளார். இந்த நிலையானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு பல்வேறு சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.

கன்னி 

குருவின் நகர்வு மூலம் நன்மைகளை அடையும் ராசிகளில் ஒன்றாக கன்னி ராசி உள்ளது. உங்கள் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும்.வேலையில் நீங்கள் பல முக்கியமான பணிகளை செய்ய நேரிடலாம். கன்னி ராசிக்கு சுபிட்சம் வந்து சேரும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே குரு உள்ளதால் பணவரவு அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் உறுதி ஆகும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்படும். செலவுகளும் அதிகரிக்கலாம் என்பதால் அதற்கு ஏற்ப திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. இந்த காலகட்டத்தில், புதிய வேலைகளைத் தொடங்குவது நன்மைகளை தரும். திருமணம் ஆன ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இனிமையான திருமண வாழ்கை அமையும். 

சிம்மம்

தொழில் துறையில் உள்ள சிம்மம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். குருபகவானின் நல்ல செல்வாக்கால், உங்கள் நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.