Guru Vagra Peyarchi 2024: அடேங்கப்பா…! ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்! கோடீஸ்வர யோகம் பெரும் 6 ராசிகள்!
Guru Vagra Peyarchi 2024: வக்ரம் பெறும் கிரகங்களின் அழுத்தம் மிக அதிகம் ஆக இருக்கும் என்பதால் வக்ரம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்களும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி சில ராசிகள் மற்றும் லக்னத்திற்கு உண்டு.
இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : உச்சம் தொடும் யோகம் யாருக்கு.. வேலையில் கவனம்.. வெற்றி தேடி வரும்.. உங்க அதிர்ஷ்டத்தை பாருங்க!
Mar 17, 2025 10:50 PMசனி செவ்வாய் சேர்க்கை.. ‘சொத்தை பிரித்து வாங்கி விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!
Mar 17, 2025 08:40 PMTomorrow Rasipalan : மார்ச் 18, 2025 நாளைய ராசிபலன்கள்.. 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?
Mar 17, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : தொட்டதெல்லாம் வெற்றியா உங்களுக்கு.. இன்று மார்ச் 17 கவனமாக காய் நகர்த்த வேண்டியது யார் பாருங்க
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
வக்ரம் பெறும் கிரகங்களின் அழுத்தம் மிக அதிகம் ஆக இருக்கும் என்பதால் வக்ரம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்களும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
சாய கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, கேது ஆகியோர் எப்போதுமே வக்ரநிலையில் பயணிக்க கூடிய கிரகங்கள் ஆகும். இவை தீய கிரகங்கள் என்பதால் இதன் தீமைகள் பெரிய அளவில் இருக்கும். ஆனால் குரு பகவான் முழு சுபர் என்பதால் வக்ரம் பெறும் போது எதிர்பாராத திடீர் தனவரவு பலருக்கு ஏற்படும்.
மேஷம்
மேஷம் ராசி அல்லது மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கும். இவர்களுக்கு 2ஆம் இடமான தன ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரம் பெற்று உள்ளார். காலபுருஷனுக்கு 2ஆம் வீடான ரிஷபம் என்பது சுக்கிரன் வீடாகும். இங்கு குரு பகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு அதிகம் ஆக இருக்கும். பேச்சைத்தொழிலாக கொண்டோருக்கு பண வரவு மிகப்பெரிய அளவில் இருக்கும். உணவுத்தொழில் சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய வாய்ப்புகளை உண்டாக்கி தரும். கண் மற்றும் பல், முகம் சார்ந்த மருத்துவத் தொழிலில் இருப்பவர்களுக்கு நிதிரீதியிலான முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அல்லது ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அடுத்த 4 மாதங்களில் அமோகமான வளர்ச்சி இருக்கும். இரு பகவான் உங்கள் ராசியில் இருப்பது மிக சுபமான ஒன்றாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் வெற்றியை தருவதாக அமையும்.
கடகம்
கடகம் ராசி அல்லது கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான யோகம் உண்டாகும். லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் அடைகிறார். ஒருவருக்கு லாபம் கிடைக்க வேண்டும் எனில் 11ஆம் இடமான லாப ஸ்தானம் வலுபெற்று இருப்பது மிக அவசியம் ஆகும்.
சிம்மம்
சிம்மம் ராசி அல்லது சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். இதனால் தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளு வெற்றி அடையும். எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். பணியில் இருக்கும் சிம்ம ராசி மற்றும் லக்னத்திற்கு எதிர்பாராத சம்பள உயர்வு உண்டாகும்.
கன்னி
கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு வக்ரம் பெறுகிறார். முன் ஜென்மத்தில் நாம் செய்த நன்மைகளுக்கான பலன்கள் பாக்கிய ஸ்தானம் மூலம் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் செல்லும் போது முன் ஜென்மத்தில் செய்த நல்வினைகளுக்கான பலன்கள் கிடைக்கும்.
மகரம்
மகரம் ராசி அல்லது மகரம் லக்னத்திற்கு கண்டிப்பாக கோடீஸ்வர யோகம் உண்டு. உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானம் ஆன 5ஆம் இடத்தில் உள்ள குரு வக்ரம் பெறுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த பிறவியில் செய்த நல்வினைகளுக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு திடீர் எதிர்பாரா அதிர்ஷ்டம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
